சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி முதலமைச்சர் திரு ந. ரங்கசாமியை புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 9:23PM by PIB Chennai

புதுச்சேரி முதலமைச்சர் திரு ந. ரங்கசாமியை இன்று, புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, புதுச்சேரி சட்டப்பேரவையில் சந்தித்தார்.

ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற திரு ந. ரங்கசாமி அவர்களுக்கு பேராசிரியர் பிரகாஷ் பாபு வாழ்த்து தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, கடந்த ஓராண்டில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாதனைகள், செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையில் PU Expanding Horizons என்ற தலைப்பில் பல்கலைக்கழக சிறப்பு நினைவு புத்தகத்தை துணைவேந்தர் பிரகாஷ் பாபு முதலமைச்சரிடம் வழங்கினார்.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261239) வருகையாளர் எண்ணிக்கை : 1458
இந்த வெளியீட்டை படிக்க: English