சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிஐஎஸ் சார்பில் தரநிலைகள் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 8:27PM by PIB Chennai

இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) கோயம்புத்தூர் கிளை அலுவலகம், சானிட்டரி நாப்கின்கள், பேன்டி லைனர்கள், மகப்பேறு பேட்கள், பீரியட் பேன்டீஸ்கள், டிஸ்போசபிள் பேபி டயப்பர்கள் மற்றும் பெரியவர்களுக்கான சிறுநீர் டயப்பர்கள் தொடர்பான தரநிலைகள் குறித்த “மானக் மந்தன்” என்ற தொழில்நுட்பக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை 2026 மே 14 அன்று கோயம்புத்தூரில் ஏற்பாடு செய்திருந்தது.
மருத்துவ-தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான சுகாதாரப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளை நிர்வகிக்கும் இந்தியத் தரநிலைகள் குறித்து உற்பத்தியாளர்கள், தொழில்துறையினர், சோதனை ஆய்வகங்கள், புத்தொழில் நிருவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், கல்வித்துறை, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய பிஐஎஸ் அமைப்பின் விஞ்ஞானி-டி/இணை இயக்குநர் திருமதி திவ்யா எஸ், பிஐஎஸ்-ன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். புது தில்லி, பிஐஎஸ் தலைமையகத்தின், மருத்துவ தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான தொழில்நுட்ப ஜவுளிகள், தொழில்நுட்பக் குழுவின் விஞ்ஞானி-பி/உதவி இயக்குநர் மற்றும் உறுப்பினர் செயலாளரான திரு அமித்குமார் பாண்டே, மருத்துவ தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கான தொழில்நுட்ப ஜவுளிகளின் கீழ், சுகாதாரப் பொருட்கள் குறித்த ஒரு சிறப்பு தொழில்நுட்ப விளக்கக்காட்சி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஐஎஸ் 17508:2020-ஐத் தவிர, மேலே குறிப்பிடப்பட்ட தரநிலைகளின் கீழ் வரும் தயாரிப்புகள், தரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்யும் வகையில், ஐஎஸ்ஐ முத்திரையுடன் மட்டுமே நாடு முழுவதும் விற்பனை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
தரநிலைகள் அமலாக்கம், தரத் தேவைகள், தயாரிப்புப் பாதுகாப்பு மற்றும் சான்றிதழ் அம்சங்கள் குறித்து தொழில்துறைப் பிரதிநிதிகள் மற்றும் பிஐஎஸ் அதிகாரிகளுக்கும் இடையேயான கலந்துரையாடலை எளிதாக்கும் வகையில், ஒரு வெளிப்படையான கலந்துரையாடல் அமர்வும் நடத்தப்பட்டது.

கோயம்புத்தூர், பிஐஎஸ்-ன் விஞ்ஞானி-சி/துணை இயக்குநரான திரு. சிமேஷ் குமார் நன்றியுரையுடன் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
தொழில்துறைப் பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், சோதனை ஆய்வகங்கள், கல்வியாளர்கள், தொழில்முனைவோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261225)
வருகையாளர் எண்ணிக்கை : 26