பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பணியாளர் மற்றும் பயிற்சித் துறையும், திறன் மேம்பாட்டு ஆணையமும் இணைந்து தேசியத் துறைசார் உச்சிமாநாட்டை நடத்துகிறது

प्रविष्टि तिथि: 14 MAY 2026 4:34PM by PIB Chennai

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையும், திறன் மேம்பாட்டு ஆணையமும்  இணைந்து, மே 15, 2026 அன்று “திறன் மேம்பாட்டை நிறுவனமயமாக்குதல்: பயிற்சியிலிருந்து செயல்திறன் சார்ந்த நிர்வாகம் வரை” எனும் தலைப்பில் தேசியத் துறைசார் உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. மத்திய பணியாளர், பொதுக் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் இந்த உச்சிமாநாடு இணையவழியில் நடத்தப்படவுள்ளது. 

மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும், பணி, திறன் மற்றும் செயல்திறன் சார்ந்த திறன் மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பு மற்றும் செயலாக்க நடைமுறைகள் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க இந்த உச்சிமாநாடு உதவிடும்.

இந்த உச்சிமாநாட்டிற்கு முன்னோட்டமாக, பிப்ரவரி 26 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து ஒரு தேசியப் பயிலரங்கம் இணையவழியில் நடத்தப்பட்டது. இந்தப் பயிலரங்கில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொது நிர்வாகத் துறைகள்/பணியாளர் துறைகள் அல்லது அதற்கு இணையான துறைகளின் தலைவர்கள், மாநில/யூனியன் பிரதேச நிர்வாகப் பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் மூத்த பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261017&reg=3&lang=1

(Release ID: 2261017)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2261208) आगंतुक पटल : 51
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी