சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
திருப்பூரில் பாட்டில் குடிநீர் உற்பத்தி ஆலைகளில் பிஐஎஸ் சோதனை
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2026 7:45PM by PIB Chennai

இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) கோயம்புத்தூர் கிளை அலுவலக அதிகாரிகள், இன்று (13 ஆம் தேதி) திருப்பூர், மன்னாரையில் உள்ள முருகன் மினரல்ஸ் மற்றும் திருப்பூர், கணபதிபாளையத்தில் உள்ள ஸ்ரீ கணபதி ஃபுட்ஸ் ஆகிய நிறுவனங்களில் அமலாக்கச் சோதனைகளை நடத்தினர்.
பிஐஎஸ் இயக்குநர் திரு ரினோ ஜான் மற்றும் திரு ஏ. அறிவழகன் ஆகியோர் அடங்கிய குழுவும், இயக்குநர் திரு வினித் குமார் ஜி மற்றும் துணை இயக்குநர் திரு கௌதம் சந்த் சோனி ஆகிவிவர் அடங்கிய மற்றொரு குழுவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. பிஐஎஸ் சட்டம், 2016-இன் பிரிவு 28-இன் கீழ் நடத்தப்பட்ட சோதனையின் போது, செல்லுபடியாகும் பிஐஎஸ் உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்த அலகுகள் உரிமம் இல்லாமல் கேன்களில் குடிநீரைத் தயாரித்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது, பிஐஎஸ் சட்டம், 2016-இன் விதிகளை மீறியதற்காக, 20 லிட்டர் பிஇடி (PET) கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் ஸ்டிக்கர்கள்/லேபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தங்களுக்கு வழங்கப்படும் குடிநீர், முறையான பிஐஎஸ் உரிமத்தையும் உண்மையான ஐஎஸ்ஐ முத்திரையையும் கொண்டுள்ளதா என்பதை நுகர்வோர் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வாங்குவதற்கு முன், நுகர்வோர் பொருளில் அச்சிடப்பட்டுள்ள CM/L எண்ணைப் பயன்படுத்தி பிஐஎஸ் கேர் (BIS Care) செயலி மூலம் உரிமத்தின் செல்லுபடியை சரிபார்க்கலாம்.
உற்பத்தியாளர்களும் விநியோகஸ்தர்களும் பிஐஎஸ் சட்டம், 2016-இன் விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரையைத் தவறாகப் பயன்படுத்துதல், காலாவதியான உரிமங்களைப் பயன்படுத்துதல் அல்லது பிஐஎஸ் சான்றிதழ் குறித்து தவறான தகவல்களை அளித்தல் ஆகியவை நுகர்வோர் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிப்பதுடன், சட்டத்தின் கீழ் தகுந்த தண்டனை நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும்.
பிஐஎஸ் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள் தொடர்பான ஏதேனும் புகார்களுக்கு, பிஐஎஸ் கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் இயக்குநர் மற்றும் தலைவரான திரு ரமேஷ்-ஐ +91422-2248892 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2260859)
வருகையாளர் எண்ணிக்கை : 32