எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய மின்சக்தித் துறையில் ஒரு மைல்கல்: ஒழுங்குமுறை ஆணையங்கள் கூட்டமைப்பின் 100-வது கூட்டம் மற்றும் 21-ஆம் ஆண்டு விழா

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAY 2026 5:19PM by PIB Chennai

இந்திய மின்சக்தித் துறையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வரும் ஒழுங்குமுறை ஆணையங்களின் கூட்டமைப்பு (FOR), தனது 100-வது கூட்டத்தை புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கொண்டாடியது. 2005-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, மத்திய, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை ஒருங்கிணைத்து, கடந்த 21 ஆண்டுகளாக சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரன் மற்றும் டெரி அமைப்பின் ஸ்ரீ அஜய் சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். கூட்டமைப்பின் செயல்பாடுகளை விளக்கும் புத்தகத்தை டாக்டர் மிஸ்ரா வெளியிட்டார்.

மின்சாரக் கட்டண சீரமைப்பு மற்றும் வெளிப்படையான அணுகுமுறை ஆகியவற்றில் கூட்டமைப்பின் பங்களிப்பிற்கு டாக்டர் மிஸ்ரா பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் கார்பன் வெளியேற்றத்தை 'நிகர பூஜ்ஜியம்' இலக்கை அடையவும், அதன் பயன்பாட்டைக்  குறைக்கவும் சூரியசக்தி திட்டங்கள் போன்ற முன்னெடுப்புகள் அவசியம் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259887&reg=3&lang=1

SS/SV/SE/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2260291) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी