சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி அதிவேக இணைய சேவைகளுக்கான முகாம்களை நடத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAY 2026 6:49PM by PIB Chennai
பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனம், அதிவேக இணைய சேவைகளை உடனடியாக பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக, இந்த வாரம் முழுவதும் விரிவான மார்க்கெட்டிங் மேளாக்கள் மற்றும் வீடு தோறும் நேரடி விளக்க முகாம்களை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முகாம்கள் மூலம் சென்னை முழுவதும் உள்ள பொதுமக்கள், BSNL அதிவேக ஃபைபர் இணைய சேவைகளுக்கு உடனடி பதிவு செய்யும் வசதி பெறலாம்.
மேற்கு சென்னை
• சிஎம்பிடி கோயம்பேடு பேருந்து நிலையம், திருத்தணி பேருந்து நிலையம் மற்றும் பள்ளிப்பட்டு
• ரோகிணி திரையரங்கம் (கோயம்பேடு) மற்றும் சூளைமேடு மார்க்கெட்
வட சென்னை
• ஜிகேஎம் காலனி பூங்கா பகுதி மற்றும் அண்ணாநகர் பார்க் ரோடு
• அர்பன் ரைஸ் (திருமழிசை) மற்றும் சென்னை பல் மருத்துவ கல்லூரி
• கடற்கரை ரயில் நிலையம் மற்றும் கால்மண்டபம்
மத்திய சென்னை
• வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், ஸ்கீம் ரோடு
• வடக்கு உஸ்மான் சாலை (குரோமா கட்டிடம் அருகில்)
• செரீன் ஏக்கர்ஸ், கண்ணகி நகர், துரைப்பாக்கம்
• தெற்கு மாட வீதி, மயிலாப்பூர்
தென் சென்னை
• ஜிஎஸ்டி சாலை (ஆலந்தூர் நீதிமன்றம் அருகில்), கேளம்பாக்கம் பேருந்து நிறுத்தம், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் மற்றும் எம்எம்என் பேருந்து நிலையம்
• நங்கநல்லூர் டிஎன்ஜிஓ காலனி, முகலிவாக்கம், ஸ்ரீநகர் காலனி சாலை மற்றும் மாடம்பாக்கம் மெயின் ரோடு
• புதிய/பழைய பெருங்களத்தூர், குரோம்பேட்டை (புதிய காலனி) பகுதிகள் மற்றும் பொழிச்சலூர், பம்மல், பல்லாவரம் பகுதிகளில் வீடு தோறும் மார்க்கெட்டிங்
• அனுபுரம் மார்க்கெட், கோவளம் சாலை, எஸ்பிஐ வல்லம் மற்றும் நத்தம் பகுதிகளில் சிறப்பு முகாம்கள்
பதிவு மற்றும் வாடிக்கையாளர் உதவி சேவைகள்
• பொதுமக்கள் மேற்கண்ட இடங்களில் நடைபெறும் மேளாக்கள் மூலம் புதிய அதிவேக இணைய இணைப்புகளுக்கு பதிவு செய்யலாம்.
• ஏற்கனவே உள்ள இணைப்புகளில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், 1800 4444 என்ற எண்ணில் அழைத்தோ அல்லது தானியங்கி வாட்ஸ்அப் சேவையின் மூலம் புகார் அளிக்கலாம்.
• இணையதளம்: www.bsnl.co.in
• கூடுதல் உதவிக்கு வாட்ஸ்அப் எண்: 9444007007
****
TV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259972)
வருகையாளர் எண்ணிக்கை : 75