சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வை அறிவித்துள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2026 7:03PM by PIB Chennai
"ஒருங்கிணைந்த இந்தி மொழிபெயர்ப்பாளர் தேர்வு, 2026" குறித்த அறிவிப்பை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு 'குரூப் பி' பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆணையம் போட்டித் தேர்வை நடத்தவுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். பணியிட விவரங்கள், வயது வரம்பு, அடிப்படை கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அனைத்தும், இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ssc.gov.in மூலமாகவோ அல்லது ஆண்ட்ராய்டு அலைபேசிகளில் உள்ள 'mySSC' என்ற செயலி மூலமாகவோ, இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 14.05.2026 இரவு 11:00 மணி ஆகும். இணையவழியில், தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 15.05.2026 இரவு 11:00 மணி ஆகும். தென் மண்டலத்தில், கணினி வழித் தேர்வு, 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடைபெறும். இந்தத் தேர்வு ஆந்திரப் பிரதேசத்தில் 4 மையங்கள், தமிழ்நாட்டில் 4 மையங்கள், தெலங்கானாவில் 2 மையங்கள் என 10 மையங்கள்/நகரங்களில் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259166®=3&lang=1
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259175)
வருகையாளர் எண்ணிக்கை : 20