சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சுருக்கெழுத்தாளர் நிலையிலான 'சி' & 'டி' நிலையிலான பணியிடத் தேர்வு 2026

प्रविष्टि तिथि: 30 APR 2026 6:11PM by PIB Chennai

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சுருக்கெழுத்தாளர் 'சி' & 'டிநிலையிலான பணியிடங்களுக்கான தேர்வு குறித்த  அறிவிப்பை 24.04.2026 அன்று வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கணினி அடிப்படையில் நடைபெறும். பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள்/அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை https://ssc.gov.in என்ற ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது மைஎஸ்எஸ்சி (MySSC) மொபைல் செயலி மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி 15.05.2026 (23:00 மணி) ஆகும். ஆன்லைன் வாயிலாக கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 16.05.2026 (23:00 மணி) ஆகும்.

தென் மண்டலத்தில்கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வு தோராயமாக 2026 ஜூலை - ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையே நடைபெறும். இந்த மண்டலத்திற்கு உட்பட்ட 26 மையங்கள்/நகரங்களில் தேர்வு நடைபெறும்: ஆந்திரப் பிரதேசத்தில் 12 மையங்களிலும்புதுச்சேரியில் 01 மையத்திலும்தமிழ்நாட்டில் 09 மையங்களிலும்தெலுங்கானாவில் 04 மையங்களிலும் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

பதவியின் விவரங்கள்வயது வரம்புஅத்தியாவசிய கல்வித் தகுதிசெலுத்த வேண்டிய கட்டணம்தேர்வுத் திட்டம் ஆகியவை பற்றிய தகவல்கள் இந்த ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

***

SS/SMB/RJ/PD/SH


(रिलीज़ आईडी: 2257036) आगंतुक पटल : 61
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English