சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை ஐஐடி-யின் தொழில் ஊக்குவிப்பு மையம் 112 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளித்து 431 காப்புரிமைகளை பதிவு செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 27 APR 2026 4:55PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), தனதுஸ்டார்ட்அப் சதம்திட்டத்தின் கீழ், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 100-க்கும் அதிகமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவித்து, ஆழ்ந்த தொழில்நுட்ப தொழில்முனைவுத் துறையில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. சென்னை ஐஐடி தொழில் ஊக்குவிப்பு மையத்தின் மூலம், கடந்த ஆண்டு சாதனையை முறியடித்து, 2025–26 நிதியாண்டில் 112 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

அதே வேளையில், சென்னை ஐஐடி தனது புத்தாக்க வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. 2023-24-ல் 378, 2024-25-ல் 419 என்ற எண்ணிக்கையில் இருந்து உயர்ந்து இந்த ஆண்டில் 431 காப்புரிமைகளைத் தாக்கல் செய்துள்ளது. தில் இந்தியாவில் 352-ம் சர்வதேச அளவில் 79-ம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆராய்ச்சிகளை நடைமுறைப் பயன்பாட்டுக்கு மாற்றுவதில் முதன்மைத் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சென்னை ஐஐடி தொழில் ஊக்குவிப்பு மையத்தின் 13-வது ஆண்டில் ஊக்குவிப்பு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 567-ஐ எட்டியுள்ளது. அண்மைக்கால நிதி திரட்டல்களின் அடிப்படையில், இந்நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.74,100 கோடிக்கும் (சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு யூனிகார்ன் நிறுவனங்களும் பல்வேறு இணைப்புகளும்/கையகப்படுத்துதல்களும் அடங்கும்.

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த வெள்ளியன்று (24 ஏப்ரல் 2026) நடைபெற்ற உலக அறிவுசார் சொத்துரிமை நாள் கொண்டாட்டத்தின் போது, மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனர்களிடையே இந்த அறிவிப்புகளை சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி வெளியிட்டார். ஸ்டார்ட்-அப் உருவாக்கம், வலுவான காப்புரிமை நடவடிக்கைகள் ஆகியவற்றின் இந்த இணைப்பானது, ஆராய்ச்சிகளை நடைமுறைப் பயன்பாட்டிற்கு மாற்றுவதில் நமக்கிருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது" ன்று அவர் குறிப்பிட்டார்.

"தொடர்ச்சியான இந்தக் காப்புரிமை வேகத்திற்கு ஆதரவாக, ஆராய்ச்சியாளர்களின் யோசனைகளை பாதுகாக்கப்பட்ட- பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களாக மாற்ற உதவும் வலுவான நிறுவனக் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை ஐஐடி டீன் (ஐசிஎஸ்ஆர்) பேராசிரியர் மனு சந்தானம் கூறினார்.

புதிதாகத் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உற்பத்தி, ரோபாட்டிக்ஸ், வாகனத் துறை, பேட்டரிகள், பாதுகாப்புத் துறை, விண்வெளி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு, மிஷின் லேர்னிங், குவாண்டம் தொழில்நுட்பங்கள், தரவு பகுப்பாய்வு, பின்டெக், ஹெல்த்டெக், அக்ரிடெக், பயோடெக், காலநிலை தொழில்நுட்பங்கள், ஐஓடிஇ சைபர்-பிசிகல் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான ஆழ்ந்த தொழில்நுட்பத் துறைகளில் பரவியுள்ளன.

இந்த நிகழ்வின் போது, கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) அதிகப்படியான காப்புரிமைத் தாக்கல், வணிகமயமாக்கலில் பங்களித்த பேராசிரியர்கள், மாணவர்களுக்குப் பேராசிரியர் வி.காமகோடி, ஜே.சி.போஸ் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

***

SS/SMB/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2255948) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English