சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஐஐடி மெட்ராஸ், தொழில்துறை கூட்டுமுயற்சிகள் மூலம் தில்லியில் தொழில்நுட்ப மாநாட்டை நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 22 APR 2026 5:09PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கான தொழில்நுட்பம் சார்ந்த பாதைகளை ஒன்றிணைந்து உருவாக்குவதற்காக, தொழில் துறை, அரசு, கல்வித்துறையில் முன்னிலையில் இருப்பவர்களை ஒன்றிணைத்து, 2026 மே 5 அன்று தில்லியில் தொழில்நுட்ப மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

தொழில் துறை- கல்வித்துறை- அரசு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047’ என்ற தேசிய இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்தும் உயர்மட்டத் தளமாக ‘ஐஐடிஎம்-யில் இருந்து பாரதத்திற்காக இணைந்து உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளுடன் இம்மாநாடு நடத்தப்படுகிறது.

வேளாண்மை, மருத்துவம், நிலைத்தன்மை, சுற்றுச்சூழல், திறன் மேம்பாடு, கல்வி போன்ற முக்கியத் துறைகளில் முன்னோடி ஆராய்ச்சி, ஆழ்ந்த-தொழில்நுட்ப ஊக்குவிப்பு, தொழில்முனைவு, பயன்பாட்டுக் கூட்டுமுயற்சி ஆகியவற்றின் மூலம் ஐஐடி மெட்ராஸ் தேசிய நலன் சார்ந்த திட்டங்களில் தீவிரப் பங்களிப்பை வழங்கி வருகிறது.

இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வமுள்ள நிறுவனங்கள், தொழில் துறை முன்னணியினர் https://sociity.in/iitm-tech-summit2026/ இணையதளத்தில் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கு 2026 மே 4-ஆம் தேதி கடைசி நாளாகும்.

***
 

TV/IR/KPG/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2254638) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English