சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஃபெடெக்ஸ் நிறுவனம் – ஐஐடி மெட்ராஸ் இணைந்து இந்தியாவில் முதல்முறையாக நகர்ப்புற பகுதிளில் ட்ரோன் வாயிலான விநியோக சோதனையில் வெற்றியடைந்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 20 APR 2026 2:13PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து நிறுவனமான ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம், ஐஐடி மெட்ராஸ் ஆகியவை இணைந்து நகர்ப்புற பகுதியில் நடத்தப்பட்ட முதலாவது ட்ரோன் விநியோக சோதனைகளை பெங்களூருவில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.

இது நகர்ப்புற சரக்குப் போக்குவரத்துக்கான பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க நிலை எட்டியுள்ளதை குறிப்பதுடன், இந்தியாவில் அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பம் சார்ந்த விநியோக நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான ஃபெடெக் நிறுவனத்தின் உறுதியான செயல்பாடுகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

பெங்களூருவில் இரண்டாம் கட்ட மின்னணு நகரத்தையும், பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள  பகுதியை இணைக்கும் மிட்-மைல் வான்வழி சரக்குப் போக்குவரத்து சேவைக்கான சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்தும் வகையில் இந்த சோதனைகள் அமைந்துள்ளன. ஐஐடி மெட்ராடஸ் வளாகத்தில் உள்ள ஃபெடெக்ஸ் ஸ்மார்ட் மையத்தின் ஆராய்ச்சி கட்டமைப்பின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனை முயற்சி, சிக்கலான நகர்ப்புற வான்பகுதியில் அதிவேக ட்ரோன் செயல்பாடுகளைச் சோதித்ததுடன், அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், நெரிசலான சாலைக் கட்டமைப்புகளைச் சார்ந்திருக்கும் விநியோக நடைமுறைகளை குறைப்பதற்கும் சாதகமாக உள்ள அம்சங்களை மதிப்பீடு செய்ய உதவியது. எதிர்காலத்தில் புதுமையான, பாதுகாப்பான மற்றும் விரிவாக்கம் செய்யக்கூடிய சரக்குப் போக்குவரத்திற்கான தீர்வுகள் குறித்து ஆய்வு செய்யும் ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் உலகளவிலான முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்தகைய சோதனைகள் அமைந்துள்ளன.

இந்த  சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது என்று ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்திற்கான சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் வான்வழி வலையமைப்பு பிரிவின் துணைத்தலைவர் திரு நிதின் நவ்நீத் தாதிவாலா தெரிவித்துள்ளார்.

ஃபெடெக்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் வர்த்தக நடைமுறைகளை எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதற்கு புதுமையான முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார். இந்த சோதனை முயற்சி, வான்வழி சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், மின்சார வாகன ஒருங்கிணைப்பு, தேவைகள் குறித்த முன்கூட்டிய கணிப்புகள் ஆகியவற்றில் ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் மையம் மேற்கொண்டு வரும் விரிவான ஆராய்ச்சிகள் குறித்த நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று கூறினார். கல்வி, தொழில்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து, எதிர்காலத்திற்குத் தேவையான, மீள்தன்மை கொண்ட நீடித்த விநியோகச் சங்கிலி அமைப்புகளுக்கான சூழலை உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக திரு நிதின் நவ்நீத் தாதிவாலா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253710&reg=3&lang=1

***
 

SS/SV/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2253837) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English