சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சான்சிபாரில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் 2026 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 13 APR 2026 3:55PM by PIB Chennai

தான்சானியாவின் சான்சிபாரில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் 2026 கல்வியாண்டில் முழு நேர இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விவரங்களை https://admissions.iitmz.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவில் பிஎஸ் 4 ஆண்டு பட்டப்படிப்பு, எம்டெக் 2 ஆண்டு பட்டப்படிப்பு, ரசாயன பதப்படுத்துதல் பொறியியலில் பிஎஸ் பட்டப்படிப்பு ஆகியவை  கற்பிக்கப்பட உள்ளன. எம்டெக் படிப்புக்கு குறும்பட்டியல் தயாரிப்பதற்கான தேர்வு 2026 ஏப்ரல் 26-ம் தேதியும் பிஎஸ் படிப்புக்கு குறும்பட்டியல் தயாரிப்பதற்கான தேர்வு 2026 ஜூன் 6-ம் தேதியும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரே நேரத்தில் நடைபெறும்.

 

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் திரு காமகோட்டி, சான்சிபாரில் உள்ள சென்னை ஐஐடி வளாகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முழு நேர பட்டப்படிப்பில் சேருமாறு உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை தாம் வரவேற்பதாக கூறினார்.

தற்போது இந்த வளாகத்தில் 129 மாணவர்கள் பயில்கின்றனர். இதில் 51 சதவீதம் பேர் தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்கள் எத்தியோப்பியா, ஜாம்பியா, கென்யா நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2251521&reg=6&lang=1

                              ***
SS/IR/KPG/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2251632) வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க: English