பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஜோர்டான் பயணம் குறித்த கூட்டு அறிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 16 DEC 2025 3:29PM by PIB Chennai

ஜோர்டான் ஹாஷிமைட் ராஜ்யத்தின் மன்னர் இரண்டாம் அப்துல்லா இப்னு அல் ஹுசைனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 15-16 ஆகிய தேதிகளில்  ஜோர்டானுக்கு பயணம் மேற்கொண்டார்.

 

இரு நாடுகளும் இருதரப்பு தூதரக  உறவுகள் நிறுவப்பட்டதன் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் ஒரு முக்கியமான நேரத்தில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் நடைபெறுவதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

பரஸ்பர நம்பிக்கை, பாசம் மற்றும் நல்லெண்ணத்தால் வகைப்படுத்தப்படும் தங்கள் நாடுகளுக்கு இடையேயான நீண்டகால உறவை இரு தலைவர்களும் பாராட்டினர். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு ஒத்துழைப்புத் துறைகளில் பரவியுள்ள பன்முக இந்தியா-ஜோர்டான் உறவுகளை அவர்கள் நேர்மறையாக மதிப்பிட்டனர்.

 

இருதரப்பு மட்டத்திலும் பலதரப்பு மன்றங்களிலும் இரு தரப்பினருக்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்பை தலைவர்கள் பாராட்டினர். நியூயார்க் (செப்டம்பர் 2019), ரியாத் (அக்டோபர் 2019), துபாய் (டிசம்பர் 2023), இத்தாலி (ஜூன் 2024) ஆகிய இடங்களில் நடைபெற்ற தங்களின் முந்தைய சந்திப்புகளை அவர்கள் அன்புடன் நினைவு கூர்ந்தனர்.

 

தலைவர்கள் டிசம்பர் 15 அன்று அம்மான் நகரில் இருதரப்பு மற்றும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். அப்போது அவர்கள் இந்தியா மற்றும் ஜோர்டானுக்கு இடையிலான உறவுகள் குறித்து விவாதித்தனர். பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், தங்களின் அந்தந்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் நம்பகமான பங்காளிகளாக ஒன்றிணைந்து செயல்படவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

இந்தியா மற்றும் ஜோர்டானுக்கு இடையேயான வலுவான இருதரப்பு வர்த்தக ஈடுபாட்டை தலைவர்கள் பாராட்டினர். 2024-ம் ஆண்டிற்கான இதன் மதிப்பு தற்போது 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், இது இந்தியாவை ஜோர்டானின் மூன்றாவது பெரிய வர்த்தக பங்காளியாக ஆக்குகிறது. இருதரப்பு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்த வர்த்தகப் பன்முகத்தன்மையை விரிவுபடுத்துவதன் அவசியத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர். பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கண்காணிக்க, 2026-ம் ஆண்டின் முதல் பாதியில் 11-வது வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டுக் குழுவை விரைவில் கூட்டுவதற்கும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மன்னர் இரண்டாம் அப்துல்லா, சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு , பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் தலைமைத்துவத்தைப் பாராட்டினார்.

இந்தப் பயணத்தின் முடிவில், பிரதமர் திரு நரேந்திர மோடி, தமக்கும் தன்னுடன் வந்த தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக மன்னர் இரண்டாம் அப்துல்லாவுக்கு தமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். தமது பங்கிற்கு,  பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்தியாவின் நட்புறவு கொண்ட மக்களுக்கும் மேலும் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக மன்னர் தமது  மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204593&reg=3&lang=1

(Release ID: 2204593)

 

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2250236) வருகையாளர் எண்ணிக்கை : 22