சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையம் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4.1 கோடி மதிப்பிலான பொருட்களை அழித்தது
இடுகை இடப்பட்ட நாள்:
07 APR 2026 5:21PM by PIB Chennai

சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள், மதுபானம், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையம் கும்மிடிப்பூண்டியில் 2026 மார்ச் 26 அன்று அழித்தது. 8.3 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள், 4,098 ஈ-சிகரெட்டுகள், 138 மதுபான பாட்டில் பெட்டிகள், 445 பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட மின்னணுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் அடங்கிய 10 பெட்டிகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அழிக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 4.1 கோடி ரூபாயாகும்.

***
SS/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2249779)
வருகையாளர் எண்ணிக்கை : 78