எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கனிமவள மேம்பாட்டுக்கு கழகத்தின் (என்எம்டிசி) நிதி பிரிவின் இயக்குநராக திரு அனுராக் கபில் பொறுப்பேற்றுக் கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 APR 2026 3:59PM by PIB Chennai

இந்திய ரயில்வே கணக்குச் சேவை (1998-ம் ஆண்டு) அதிகாரியாக பணியில் சேர்ந்த திரு அனுராக் கபில், இந்தியாவின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தி நிறுவனமான தேசிய கனிமவள மேம்பாட்டுக்கு கழகத்தின் (என்எம்டிசி) நிதி பிரிவு இயக்குநராக செவ்வாய்க்கிழமை அன்று பொறுபேற்றுக் கொண்டார்.

இந்திய ரயில்வே மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில், 26 ஆண்டுகளுக்கும் அதிகமான தனது பணி அனுபவத்தில், திரு கபில், நிதி மேலாண்மை மற்றும் பொதுத்துறை நிர்வாகத்தில் செயல்பாட்டு நிபுணத்துவம் மற்றும் உத்திசார் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளார். இந்திய ரயில்வேயில் மூத்த கோட்ட நிதி மேலாளர், நிதி மற்றும் தலைமை கணக்கு அதிகாரி (போக்குவரத்து), நிதி மற்றும் தலைமை கணக்கு அதிகாரி (நிதி மற்றும் பொது) மற்றும் துணை தலைமை கண்காணிப்பு அதிகாரி உள்ளிட்ட முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார். மேலும், மத்திய நிலக்கரி அமைச்சகத்தில், இயக்குநராகப் பணியாற்றி, முக்கிய கொள்கை மற்றும் துறை சார்ந்த பணிகளைக் கையாண்ட அனுபவம் பெற்றுள்ளார்.

தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் ரயில்வே வாரியத்தில் நிதி (செலவினம்) நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தார். அங்கு அவர், இந்திய ரயில்வேயின் நிதிக் கொள்கை தொடர்பான விஷயங்கள், செலவின மேலாண்மை, திட்டமிடல், திட்டக் கண்காணிப்பு மற்றும் உற்பத்தித்திறன் பகுப்பாய்வு ஆகிய பிரிவுகளுக்குப் பொறுப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார். மூலதன மறுசீரமைப்பு, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலீட்டு விலக்கல் தொடர்பான முன்மொழிவுகள், ரயில்வே மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்கும் நிதி ஒப்புதல்கள் தொடர்பான முயற்சிகள் உட்பட, பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இந்திய இரயில்வே மற்றும் பல்வேறு பெரிய அளவிலான மத்திய பொதுத்துறை நிறுவனங்களில், இவர் பெற்றுள்ள நிதித்துறை சார்ந்த அனுபவம், நிதிசார் விவேகத்தையும், மதிப்பு உருவாக்கத்தையும் உறுதிசெய்யும் அதே வேளையில், தேசிய கனிமவள மேம்பாட்டுக்கு கழகத்தின் வளர்ச்சியை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248345&reg=3&lang=1

***

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2248541) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati