சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

திரு. வி.எஸ். இளந்திரை, பிஎஸ்என்எல் தமிழ்நாடு புதிய தலைமை பொது மேலாளராக பதவி ஏற்று கொண்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 APR 2026 5:40PM by PIB Chennai

திரு. வி.எஸ். இளந்திரை, இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரி, (Indian Telecom Services - 1992) பிஎஸ்என்எல், தமிழ்நாடு வட்டத்தின் தலைமை பொது மேலாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ளார்.

அவர் கோயம்புத்தூரிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (Government College of Technology) மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியலில் பட்டப்படிப்பு முடித்தார். மேலும் ராஜஸ்தானிலுள்ள பிலானி(BITS, Pilani) நிறுவனத்தில் M.S. மென்பொருள் அமைப்புகள் (Software Systems) முதுநிலை பட்டம் பெற்றார்.

அவர் தனது அரசு பணியை ஹைதராபாத்திலுள்ள எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் தொடங்கினார். அங்கு அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து கொண்டுவரப்பட்ட லேசர் டிரிம்மிங் ரோபோடிக்ஸ் இயந்திரத்தை நிறுவிய முதல் பொறியாளராக திகழ்ந்தார்.

அவர் பெங்களூரிலுள்ள இந்தியன் டெலிபோன் இன்டஸ்ட்ரீஸ் (ITI) நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். Switching, Transmission, Access மற்றும் Subscriber Premises Equipment ஆகிய தொலைத்தொடர்பு தயாரிப்புகள் மற்றும் அதன் முழுமையான தீர்வுகளில் ஈடுபட்டார். மேலும் பிரான்ஸ் நாட்டின் French Telecom (E10B) தயாரிப்புகளை இந்தியாவின் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு துறைக்காக நிறுவல் மற்றும் செயல்படுத்தும் பல திட்டங்களை முன்னின்று வழிநடத்தினார்.

பின்னர், UPSC நடத்தும் இந்திய பொறியியல் சேவையில் (Indian Engineering Services) தேர்ச்சி பெற்று, தொலைத்தொடர்பு துறையில் இந்திய தொலைத்தொடர்பு சேவையின் (Indian Telecom Service) அதிகாரியாக இணைந்தார். மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பல முக்கிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினார். OCB 283 (Alcatel - France), AXE 10 (Ericsson - சுவீடன்), EWSD (Siemens - ஜெர்மனி), 5ESS (AT&T - அமெரிக்கா) போன்ற தொலைபேசி நிலையங்கள் அவரால் வெற்றிகரமாக நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

மேலும், சென்னை நகரில் துணை பொது மேலாளராக Network Planning, Operation, Customer Service மற்றும் Billing ஆகிய துறைகளில் பணியாற்றினார். இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையின் தனியார்மயமாக்கல் காலத்தில் Airtel, Reliance, Tata, Vodafone போன்ற அனைத்து சேவை வழங்குநர்களுக்குமான Networking ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.

அவர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தொலைத்தொடர்பு துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அங்கு தொலைத்தொடர்பு அமலாக்க வள கண்காணிப்பு பிரிவு பொறுப்பை வகித்தார்.

மேலும், 2010 ஆம் ஆண்டில் சென்னை பிராந்திய தொலைத்தொடர்பு பயிற்சி மையத்தின்(Regional Telecom Training Centre) முதல்வர் ஆக பணியாற்றினார். அப்பொழுது, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பிற தன்னாட்சி பல்கலைக்கழகங்களுடன் இணைந்த பல கல்லூரிகளின் ECE மற்றும் CSE மாணவர்களின் தொலைத்தொடர்பு / வயர்லெஸ் திட்டங்களுக்கு வெளிப்புற வழிகாட்டி(External Guide) மற்றும் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.

அவர் இந்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஹாங்காங் (வான்சாய், ஹாங்காங், சீனா) நகரில் நடைபெற்ற Wireless Communication மற்றும் Value Added Services (VAS) வளர்ச்சி குறித்த சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு பெருமை சேர்த்துள்ளார்.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2247954) வருகையாளர் எண்ணிக்கை : 91
இந்த வெளியீட்டை படிக்க: English