தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணை வெளியீடு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல்

புதுச்சேரியில் ஏப்ரல் 09-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல்

வாக்கு எண்ணிக்கை மே -04-ம் தேதி மேற்கொள்ளப்படுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAR 2026 6:42PM by PIB Chennai

அசாம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கான 2026 பொதுத் தேர்தல்களுக்கான அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் புதுதில்லியில் இன்று (15.03.2026) வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ல் தேர்தல்:

தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 2026 ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

* தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் - 2026 மார்ச் 30

* வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - 2026 ஏப்ரல் 06

* மனுக்கள் மீதான பரிசீலனை - 2026 ஏப்ரல் 07

* மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 2026 - ஏப்ரல் 09

* தமிழ்நாட்டில் தேர்தல் தேதி - 2026 ஏப்ரல் 23

* வாக்குகள் எண்ணிக்கை - 2026 மே 04

புதுச்சேரியில் ஏப்ரல் 09-ல் தேர்தல் :

* புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

* புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள்.

அசாமில் ஏப்ரல் 09-ல் தேர்தல்:

* அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

* அசாமில் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள்.

கேரளத்தில் ஏப்ரல் 09-ல்  தேர்தல்:

* கேரளத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் 2026 ஏப்ரல் 4-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

* கேரளத்தில் வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள்.

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 தேதிகளில் தேர்தல்:

* மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

* முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாள்.

* மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இரண்டாம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 13ம் தேதி கடைசி நாள்.

இடைத் தேர்தல் :

கோவா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 8 தொகுதிகளில் கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

* இந்த 5 தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 24-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற மார்ச் 26-ம் தேதி கடைசி நாள்.

* குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

* இந்த 3 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 9-ம் தேதி கடைசி நாள்

தேர்தல் தொடர்பான முக்கிய தகவல்கள்:

4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டவுள்ளன. 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் 2026 மே 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் மொத்தமாக 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல் முறை வாக்காளர்கள் 12.51 லட்சம் பேர் உள்ளனர். 4 லட்சம் வாக்காளர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் 1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் இடம்பெறும்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு விபரங்கள் பகிரப்படும். வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. செல்போன்கள் வைக்க தனி ஏற்பாடு செய்யப்படும்.

வாக்குச் சாவடி மையங்களில் ஏற்படுத்தப்படும் முக்கிய வசதிகள் சில:

* மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு

* வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்

* வாக்காளர்கள் தங்களது செல்போன்களை பாதுகாத்து வைக்க ஏற்பாடு

* வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும்

* இசிஐநெட் (ECINET) செயலி மூலம் வாக்காளர்கள் தங்களது விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்:https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026315824701.pdf    

***

(Release ID: 2240396)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2240421) வருகையாளர் எண்ணிக்கை : 122
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati , Telugu , Malayalam