தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் கிராம வள திட்டத்தின் கீழ் வள மையத்தை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAR 2026 10:42AM by PIB Chennai

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, தொலைத்தொடர்புத் துறையின் கிராம வள சேவைகள் முன்னோடி முயற்சியின் கீழ் , குணா மாவட்டத்தில் உள்ள உம்ரி கிராமத்தில் ஒருங்கிணைந்த வள மையத்தைத் (சம்ரித் கேந்திரா) திறந்து வைத்தார் .

கிராமப்புறங்களில் மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த தளமாக டிஜிட்டல் இணைப்பை மாற்ற, பாரத்நெட்டின் கீழ் உருவாக்கப்பட்ட அதிவேக பிராட்பேண்ட் உள்கட்டமைப்பை இந்த முயற்சி பயன்படுத்துகிறது. இந்த மையம், சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, விவசாயம், நிதி சேவைகள், மின்-ஆளுமை ஆதரவு, தொழில்முனைவோர் வசதி, டிஜிட்டல் இணைப்பு சேவைகளை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் ஒற்றைச் சாளர கிராமப்புற சேவை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் நன்மைகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், விவசாயிகள் டிஜிட்டல் கருவிகள் மூலம் மண்ணின் ஈரப்பதம், ஊட்டச்சத்துக்கள், பயிர் ஆரோக்கியம் குறித்த தகவல்களைப் பெற முடியும் என்றார். மாணவர்கள் நவீன கற்றல் வளங்களை அணுக முடியும் எனவும் அவர் தெரிவித்தார். உம்ரியில் உள்ள மக்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களுடன் தொலைபேசி ஆலோசனை மூலம் விரைவான சுகாதாரப் பராமரிப்பைப் பெற முடியும் என்றும் இதுபோல ஏராளமான நன்மைகள் இதில் உள்ளதாகவும் திரு ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240293&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2240337) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी