அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

இந்தோ – சிங்கப்பூர் ஒத்துழைப்புடன் தூய்மை ஹைட்ரஜன் மற்றும் மேம்பட்ட கார்பன் பொருள்களுக்கான செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ஒருங்கிணைந்த பிளாஸ்மா அமைப்பு

प्रविष्टि तिथि: 13 MAR 2026 11:52AM by PIB Chennai

சர்வதேச தரத்திற்கு ஏற்ப நீடித்த எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கும் கரியமில வாயு இல்லாத ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் உயர் மதிப்பிலான கார்பன் நுண்பொருள்கள் ஆகியவற்றுக்கான மேம்பட்ட பிளாஸ்மா அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

மேம்பட்ட தூய்மை எரிசக்தி தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும்  தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட  மைக்ரோவேவ் பிளாஸ்மா தொழில்நுட்பத்தின் மூலம் மீத்தேனிலிருந்து ஹைட்ரஜனாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் நவீன கார்பன் பொருட்களைக் கொண்டு கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. ஒரு மணி நேரத்தில் 4 கிலோ ஹைட்ரஜன் வாயு உற்பத்தி மற்றும் 12 கிலோ உயர் மதிப்பிலான கார்பன் பொருட்களின் உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சாதனங்கள்  சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் நீடித்த எரிசக்தி உற்பத்தியில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ்குமார் பதக் தெரிவித்துள்ளார்.

இந்தியா, சிங்கப்பூர் இடையேயான ஒத்துழைப்பின் மூலம் மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, தூய்மை எரிசக்திக்கான தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239424&reg=3&lang=1

***

AD/SV/KPG/RK


(रिलीज़ आईडी: 2239743) आगंतुक पटल : 70
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी