மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பால் பொருட்களின் உற்பத்தி மற்றும் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் –மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 11:45AM by PIB Chennai

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 5.25 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள அவர், தமிழ்நாட்டில் மாதாந்தர பால் பயன்பாடு கிராமப்புறங்களில்  நபர் ஒன்றுக்கு 9 லிட்டராகவும் நகர்ப்புறங்களில் நபர் ஒன்றுக்கு 10 லிட்டராகவும் மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2026 பிப்ரவரி 28-ம் தேதி வரை நாடு முழுவதிலும் மொத்தம் 1,17,928 பால் மற்றும் அது சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் பால் மற்றும் அது சார்ந்த பொருட்களின் தரநிலை குறித்த பகுப்பாய்வு முறைகளை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்றும், இது தொடர்பான முழு விவரங்கள் தனியாக வெளியிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

பால் மற்றும் பால் பொருட்களை சோதனை செய்வதற்கு ஏதுவாக சோதனை மற்றும் பகுப்பாய்வு ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் நாடு முழுவதும் 252 ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களில் நடமாடும் உணவுப் பாதுகாப்பு பரிசோதனை ஆய்வகங்களுக்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் பால் உள்ளிட்ட பால் பொருட்களில் கலப்படங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239419&reg=3&lang=1

***

AD/SV/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2239739) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu