சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கான வட்ட அளவிலான ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 MAR 2026 4:29PM by PIB Chennai
அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கான வட்ட அளவிலான ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் 2026 ஏப்ரல் 16ஆம் தேதி அன்று நண்பகல் 2 மணி அளவில் சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகம் , தமிழ்நாடு வட்டம் சென்னை-600002 என்கிற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ (அ) bgt.tn@indiapost.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ மார்ச் 13ஆம் தேதி மதியம் 03 மணிக்குள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
***
TV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2235956)
வருகையாளர் எண்ணிக்கை : 24