சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுவைப் பல்கலைக்கழக காரைக்கால் வளாகம் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றங்களின் துடிப்பான மையமாக வளர்ந்து வருகிறது - துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ்
இடுகை இடப்பட்ட நாள்:
04 MAR 2026 6:29PM by PIB Chennai
LMGH.jpeg)
புதுவை பல்கலைக்கழக காரைக்கால் வளாகத்தில் உள்ள வர்த்தகத் துறை ஏற்பாட்டில் இரு நாள் தொழில்-நிறுவன இடைமுகத் திட்டமாகவும், கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளாகவும் நடைபெற்ற காம்ஃபெஸ் '26-ஐ துணைவேந்தர் தொடங்கி, உரையாற்றினார். அவர் கல்வி-தொழில் ஒத்துழைப்பு, மாணவர்களின் திறன் மேம்பாடு, புதுமை மற்றும் தொழில்முனைவோர் நோக்கை வலியுறுத்தினார். புதுச்சேரி, தமிழ்நாட்டின் 14 நிறுவனங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 போட்டிகளில் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர்க் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியனாக வென்றது.
"ஒரு மரம் நடு – ஒரு நம்பிக்கை வளர்க்க" என்ற முழக்கத்துடன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக துணைவேந்தர் மரக்கன்று நடும் திட்டத்தைத் தொடங்கினார். அப்போது அவர் சுற்றுச்சூழல் பொறுப்பு மற்றும் நிலையான வளாக வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டினார். ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் தீவிர பங்கேற்புடன் வளாகத்தின் பசுமை இயக்கத்தை வலுப்படுத்தினர்.
நிறுவன ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தெரிவுநிலைக்காக "காரைக்கால் வளாக வரலாறுகள் (CKC-PU)" தளத்தை துணைவேந்தர் அப்போது தொடங்கி வைத்தார். வளாகத்தின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் ஒருங்கிணைந்து ஆவணப்படுத்தும் இது, முற்போக்கு கண்ணோட்டத்தையும் அடையாளத்தையும் வலுப்படுத்துகிறது. அப்போது உரையாற்றிய அவர், புதுவைப் பல்கலைக்கழக காரைக்கால் வளாகம் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு முன்னேற்றங்களின் துடிப்பான மையமாக வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், ஓ.என்.ஜி.சி. உதவியுடன் மேம்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் துணைவேந்தர் திறந்து வைத்தார்.
****
TV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235345)
வருகையாளர் எண்ணிக்கை : 43