சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகமும் பிரான்சின் தெற்கு பிரிட்டானி பல்கலைக்கழகமும் கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
04 MAR 2026 5:44PM by PIB Chennai
8QI4.jpg)
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பிரான்சின் தெற்கு பிரிட்டானி பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (மார்ச் 04, 2026) கையெழுத்திட்டது. கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் எம். கிருஷ்ணன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஆர். திருமுருகனும் தெற்கு பிரிட்டானி பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் டேவிட் மெனியரும் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த மூன்று ஆண்டுகளில் இரு நிறுவனங்களுக்கிடையில் கல்வியிலும் அறிவியல் துறையிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க வகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள், கூட்டு வெளியீடுகள் உட்பட பல்வேறு கூட்டு முயற்சிகளுக்கு வகை செய்கிறது. ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கம், ஆசிரியர்கள், மாணவர்களின் பரிமாற்றத்தை செயல்படுத்துவதாகும். இது கல்வி ஒத்துழைப்பில் சர்வதேச தளத்தை வழங்கும்.
சர்வதேச மாநாடுகள், பயிலரங்குகள், பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றை இணைந்து ஏற்பாடு செய்யவும் இந்த ஒப்பந்தம் உதவும். இரு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி இலக்குகளை அடைய கல்வி தொடர்பான அம்சங்களையும், வளங்களையும் முறையாகப் பகிர்ந்து கொள்வதையும் இது ஊக்குவிக்கிறது.
துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் இது குறித்துக் கூறுகையில், இந்த ஒத்துழைப்பு கருத்துப் பரிமாற்றத்தையும் உலகளாவிய கண்ணோட்டங்களையும் அதிகரிக்கும் என்று கூறினார். அறிவியல் ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்கும் நிறுவனத்தில் கல்வித் திறனை அதிகரிப்பதற்கும் இதுபோன்ற புதுமையான நடைமுறைகள் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பேராசிரியர் மெனியர், இந்த ஒப்பந்தம் பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2235341)
வருகையாளர் எண்ணிக்கை : 129