ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயிரி மருந்து சக்தி திட்டம் மற்றும் வேதிப்பொருள் பூங்காக்களுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு: இந்தியாவின் எதிர்காலத்திற்கான முக்கிய நடவடிக்கை

प्रविष्टि तिथि: 03 MAR 2026 8:28PM by PIB Chennai

உயிரி மருந்து சக்தி  திட்டம் மற்றும் 3 பிரத்யேக வேதிப்பொருள் பூங்காக்களுக்காக ரூ.13,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்தியாவின் எதிர்காலத்திற்கான ஒரு உத்திசார் நடவடிக்கை என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா தெரிவித்தார். “பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் மற்றும் வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையதள கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.

 

பிரதமர் தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டது போல, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள்  'வளர்ச்சியடைந்த இந்தியா'விற்கான ஒரு நுழைவாயில் என்றும், இந்தியத் தொழில்துறைகள் உலகளவில் விரிவடைவதற்கான புதிய வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். 2035-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய மருந்துகளில் 40% உயிரியல்  சார்ந்தவையாக இருக்கும் என்பதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயிரி மருந்து திட்டத்திற்காக ரூ.10,000 கோடி செலவிடப்படும் என்றார்.

 

இந்தியாவின் வேதிப்பொருள் துறையின் உற்பத்தியை 2040-க்குள் 1 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 3,300 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த 3 வேதிப்பொருள் பூங்காக்கள் அமைக்கப்படும். இவை உற்பத்திச் செலவை 20-40% வரை குறைக்க உதவும். மேலும், 'நிப்பர்' (NIPER) போன்ற நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் நாடு முழுவதும் 1,000 மருத்துவப் பரிசோதனை மையங்களை உருவாக்குவதன் மூலம் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறையினர், நிதி நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படும்போதுதான் பட்ஜெட் இலக்குகளை அடைய முடியும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235160&reg=3&lang=2

 செய்தி வெளியீட்டு எண்:2235160

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2235187) आगंतुक पटल : 81
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu