சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
10-வது பதிப்பு மெப்ஸ் மாரத்தான் ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAR 2026 5:31PM by PIB Chennai
சென்னை ஏற்றுமதி செயலாக்க மண்டலமான மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 10வது பதிப்பு மெப்ஸ் மாரத்தான் ஓட்டம் 2026, இன்று (2026 மார்ச் 1, ஞாயிற்றுக்கிழமை) சென்னை தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள ஓட்டப்பந்தய வீரர்கள் உற்சாகமாக இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்வை தலைமை விருந்தினராக கலந்து கொண்ட சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் டாக்டர் பி விஜய்குமார் தொடங்கி வைத்தார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர் அரவிந்தன், தாம்பரம் காவல் துணை ஆணையர் திரு சமய் சிங் மீனா, மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டு ஆணையர் திரு அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மிகவும் ஊக்கமளிக்கும் விஷயமாக, 10 கிலோ மீட்டர் ஓட்டப் பிரிவில், புற்றுநோயிலிருந்து மீண்ட 70 வயது நபர் வெற்றி பெற்றார். அனைத்து பந்தயப் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. பத்தாவது ஆண்டாக நடைபெற்ற, மெப்ஸ் ஓட்டம் ஒரு உடற்பயிற்சி முயற்சி என்பதில் இருந்து ஒரு சமூக உடல் திறன் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2234254)
வருகையாளர் எண்ணிக்கை : 24