குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை கேரளா பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 8:42PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரை கேரள மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். இரண்டு நாள் பயணமாக கேரளா செல்லும் அவர், சங்கனாச்சேரி, திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
தமது பயணத்தின் முதல் நாளான பிப்ரவரி 28-ஆம் தேதி, சங்கனாச்சேரியில் உள்ள புனித பெர்ச்சமன்ஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.
தொடர்ந்து, மார்ச் 1-ஆம் தேதி திருச்சூர் தேவதா சி.எம்.ஐ பொதுப் பள்ளியில் அமையவுள்ள ‘சேதனா கானஸ்ரமத்திற்கு’ அடிக்கல் நாட்டுகிறார். அன்றைய தினமே திருவனந்தபுரத்தில் உள்ள புனித ஸ்டீபன் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார்.
***
(Release ID: 2233720)
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233804)
வருகையாளர் எண்ணிக்கை : 15