PIB Headquarters
இந்தியாவின் தொழில்துறை வழித்தடங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 12:44PM by PIB Chennai
அண்மைக் காலங்களில், தொழில் வழித்தடங்கள் இந்தியாவின் தொழில்துறை சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கிய மையங்களாக உருவெடுத்துள்ளன. ஏனெனில் அவை குறைந்த உற்பத்தி செலவுகள், பரந்த சந்தை அணுகல், உலகளாவிய உற்பத்தி கட்டமைப்புகளுடன் வலுவான ஒருங்கிணைப்பை உருவாக்குகின்றன. தொழில்துறை வழித்தடங்களை மேம்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வலுவான போக்குவரத்து இணைப்புடன் திட்டமிட்ட பொருளாதார மண்டலங்களாக இந்த வழித்தடங்களை அரசு நிறுவி வருகிறது. இதன் மூலம் பிளக்-அண்ட்-ப்ளே எனப்படும் உடனடியாக தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை தொடங்கும் உள்கட்டமைப்புடன் நவீன தொழில்துறை வழித்தடங்கள் உருவாக்கப்படுகிறது.
அரசின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப, 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், துர்காபூரில் தொழில்துறை வழித்தடத்தை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை வழித்தடங்கள் என்பது சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றுடன் இணைந்த கட்டமைப்பின் மூலம் முக்கிய பொருளாதார மையங்களை இணைக்கும் தொழில் மண்டலங்கள் ஆகும்.
தொழில்கள் திறன் வாய்ந்ததாகவும், நிலையானதாகவும், போட்டித்தன்மையுடனும் செயல்படக்கூடிய சூழல்களை உருவாக்குவதன் மூலம் பிராந்திய பொருளாதாரங்களை சிறப்பாக மாற்றுவதில் தொழில்துறை வழித்தடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தற்போது நாடுமுழுவதும் நான்கு முக்கிய தொழில் வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளன. 11 தொழில் வழித்தடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நான்கு வழித்தடங்களுக்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இவை கணிசமான தனியார் முதலீட்டை ஈர்க்கிறது, பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அரசின் இந்த முயற்சி நாட்டின் தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும், ஏற்றுமதி திறனை விரிவுபடுத்துவதற்கும், பிராந்தியங்களுக்கு இடையே இணைப்பை மேம்படுத்துவதற்கும் உதவும். நீண்டகால பொருளாதார மேம்பாட்டு இலக்குகளுடன் அமைக்கப்படும் இந்த தொழில்துறை வழித்தடங்கள், திறன் வாய்ந்த, உறுதியான தொழில்துறை கட்டமைப்பை உருவாக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232996®=3&lang=1
***
AD/PLM/RK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2233178)
வருகையாளர் எண்ணிக்கை : 9