சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - வருமானவரித்துறை சார்பில் கட்டுப்பாட்டு மையம் அமைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 7:51PM by PIB Chennai

நடைபெறவிருக்கும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, முறையற்ற பணப் பரிமாற்றம் மற்றும் தேர்தல் செலவினங்களைக் கண்காணிப்பதற்காக, வருமான வரித்துறையின் (புலனாய்வுப் பிரிவு) சார்பில் பிரத்யேகமான 24x7 நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தனிநபரோ அல்லது அரசியல் கட்சியோ, வாக்காளர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரொக்கம், பரிசுப் பொருட்கள் அல்லது இதர சலுகைகளை விநியோகிப்பது குறித்த புகார்களைத் தெரிவிக்க, கீழ்க்காணும் தொடர்பு எண்கள் அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம். தகவல் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

தொடர்பு முறை விவரங்கள்:  கட்டணமில்லாத் தொலைபேசி எண்: 1800 425 6669

மின்னஞ்சல் (Email) : tn.electioncomplaints2026@incometax.gov.in

வாட்ஸ் அப் (WhatsApp) எண் : 94453 94453

தொலைநகல் (Fax) 044-28271915

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232828) வருகையாளர் எண்ணிக்கை : 62
இந்த வெளியீட்டை படிக்க: English