சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னையில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம், அதன் பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
25 FEB 2026 4:51PM by PIB Chennai
சென்னையில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம், 1963-ம் ஆண்டு இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்ட தன்னாட்சி நிறுவனமாகும். இந்த நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் கல்வியை வழங்குவதில் அதன் 62 ஆண்டு கால சிறப்பு வாய்ந்தது.
இந்த நிறுவனத்தில் பல்வேறு தொழில் சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்.எஸ்சி. விருந்தோம்பல் நிர்வாகத்தில் 2 ஆண்டு முதுகலை படிப்பு, பி.எஸ்சி. விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தில் 3 ஆண்டு பட்டப்படிப்பு, பேக்கரி துறையில் ஒன்றரை ஆண்டு டிப்ளமோ படிப்பு போன்றவை இந்த நிறுவனத்தில் வழங்கப்படுகின்றன.
நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் வளாக வேலைவாய்ப்பு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் 100% வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது.
எம்.எஸ்சி. விருந்தோம்பல் நிர்வாகம், பி.எஸ்சி. விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) மூலம் நடத்தப்படுகிறது. இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணையதளத்தில் நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
***
AD/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2232786)
வருகையாளர் எண்ணிக்கை : 38