சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு மாநில வருவாய் மீதான 2023-ம் நிதியாண்டிற்கான இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
20 FEB 2026 7:38PM by PIB Chennai
2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரியின் மாநில வருவாய் மீதான தணிக்கை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று (20.02.2026) தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் 2022-23-ம் நிதியாண்டிற்கான மாநில மொத்த வருவாயின் வரவு 2,43,743.34 கோடி ரூபாயாக உள்ளது என்றும், இதில் 1,50,222.75 கோடி ரூபாய் வரி வருவாயாகவும், 17,060.95 கோடி ரூபாய் வரி இல்லாத வருவாயாகவும் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசிடமிருந்து 38,731.24 கோடி ரூபாய் வரிப் பகிர்வு தொகையாகவும், 37,734.40 கோடி ரூபாய் மானியத் தொகையாகவும் பெறப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது 2022-23-ம் நிதியாண்டில் மாநில அரசால் ஈட்டப்பட்டுள்ள மொத்த வருவாயில் 69 சதவீதமாகும் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
விற்பனை, தரகு, சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வசூலிக்கப்பட்ட 1,12,966.24 கோடி ரூபாய் மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் 75 சதவீதம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணம், மாநில கலால் வரி, மோட்டார் வாகன வரி மற்றும் நில வரி வருவாய் குறித்த தணிக்கையின் மூலம் 166.19 கோடி ரூபாய் மதிப்பிலான குறிப்புகள் குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*
AD/SV/RJ/RK/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2230946)
வருகையாளர் எண்ணிக்கை : 22