சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னையில் தேசிய தமிழ் அறிவியல் மாநாடு தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 20 FEB 2026 4:38PM by PIB Chennai

தேசிய தமிழ் அறிவியல் மாநாடு (என்டிஎஸ்சி 2026) பிப்ரவரி 20-21 நாட்களில் சென்னை சிஎஸ்ஐஆர் -  கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில், தமிழ்நாடு அறிவியலாளர் சங்கம் மற்றும் சிஎஸ்ஐஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்த மாநாட்டின் கருப்பொருள் அறிவியல், தொழில்நுட்பத்தில் நிலையான வளர்ச்சி என்பதாகும். இது தமிழ் மொழி மூலம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதற்காக ஒரு தனித்துவமான தளமாகும். இந்த மதிப்புமிக்க நிகழ்வில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

 

அறிவியலுக்கான ஒரு ஊடகமாக தமிழின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இதில் முழுமையான சொற்பொழிவுகள், நினைவுச் சொற்பொழிவுகள், அழைக்கப்பட்ட அமர்வுகள், வாய்மொழி, சுவரொட்டி விளக்கங்கள், கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறும். இது அறிவுசார் பரிமாற்றம், கலாச்சார பெருமை ஆகியவற்றுக்கான முழுமையான சூழலை உருவாக்குகிறது.  முன்னணி பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட முதன்மையான நிறுவனங்களின் புகழ்பெற்ற ஆளுமைகள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த அமர்வுகள் இயற்பியல், வேதியியல் அறிவியல், உயிரி அறிவியல், மருத்துவ அறிவியல், கணிதம், வேளாண்மை, பொறியியல், தொழில்நுட்பம், பூமி, வளிமண்டலம், சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளில் நடைபெறும்.

 

மாநாட்டின் தொடக்க விழா பிப்ரவரி 20, 2026 அன்று நடைபெற்றது. சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி இயக்குநர் டாக்டர் திருமதி ஆனந்தவல்லி விழாவிற்கு தலைமை வகித்தார். சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் உஷா நடேசன் விழாவின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி-ன் ஆலோசகர் டாக்டர் எஸ். பாரிவள்ளல் வரவேற்புரையாற்றினார். டாக்டர் ஆனந்தவல்லி, தமது தலைமை உரையில், தாய்மொழியில் கற்றலின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

மாநாட்டு மலரை விருந்தினர்கள் வெளியிட்டனர். தமிழ்நாடு அறிவுச் சங்கச் செயலர் டாக்டர் மணி பிரகஸ்பதி நன்றி கூறினார்.

***

AD/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230802) வருகையாளர் எண்ணிக்கை : 30
இந்த வெளியீட்டை படிக்க: English