அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதுதில்லியில் நடைபெற்ற ‘சோதனைக் கூடத்திலிருந்து சந்தைக்கு’ என்ற நிகழ்ச்சியில் சிஎஸ்ஐஆர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 2:21PM by PIB Chennai
திருவனந்தபுரத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் – தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் நடைபெற்ற ‘தொழில்நுட்ப இணைப்பு: சோதனைக் கூடத்திலிருந்து சந்தைக்கு’ என்ற நிகழ்ச்சி தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொழில்துறை ஈடுபாட்டில் ஒரு மைல்கல்லாக விளங்கியது. இந்த நிகழ்வில் 11 தொழில்நுட்ப பரிமாற்றங்கள் நடைபெற்றபோது, புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித்துறை செயலாளரும், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் என். கலைச்செல்வி, வழக்கமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பதிலிருந்து ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு மேம்பாடு என்பதற்கு மாற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆராய்ச்சி நிறுவனங்கள், அறிவு உருவாக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவற்றை வணிகமயமாக்கி சமூகப் பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
தொழில்நுட்ப பரிமாற்றம் என்பது இனி துணைச் செயல்பாடாக இருக்க முடியாது என்றும், தேசிய முன்னுரிமைகளான தற்சார்பு, நிலைத்தன்மை, சத்துணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இணங்க அது நிறுவனத்தின் முக்கிய தேவையாக மாற வேண்டும் என்றும் டாக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். நீடிக்கத்தக்க பேக்கேஜிங், வாசனைத் திரவிய வளர்ச்சி, கயிறு மற்றும் ரப்பர் தொழில்நுட்பங்கள், பசுமை ஹைட்ரஜன் சார்ந்த உயிரி பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் புத்தொழில் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தோடு திருவனந்தபுரத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் – தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு மையம் உருவாக்கப்பட்டிருப்பதை அவர் எடுத்துரைத்தார்.
சிஎஸ்ஐஆர் – தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சி அனந்தராமகிருஷ்ணன், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கமோடர் அமித் ரஸ்தோவி, தொழில்துறை தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230180®=3&lang=1
***
AD/SMB/RJ/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2230269)
வருகையாளர் எண்ணிக்கை : 12