சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க மத்திய-மாநில ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 14 FEB 2026 5:52PM by PIB Chennai

தமிழ்நாட்டில்  ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்புக்கு மிகவும் தேவையான உத்வேகத்தை வழங்க மத்திய அரசுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மாநில அரசை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.

  

சென்னையில் நடைபெற்ற ஆராய்ச்சி, தொழில், ஸ்டார்ட்-அப் மற்றும் தொழில்முனைவோர் (ஆர்ஐஎஸ்இ) மாநாட்டின் தொடக்க அமர்வில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஸ்டார்ட்அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களின்  முன்னெப்போதும் காணாத  வளர்ச்சியை விளக்கினார்இதற்கு மத்திய அரசின் வலுவான மற்றும் தீவிரமான கொள்கைகள்தான் காரணம் என்று கூறினார். பதிவுசெய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-ல் சுமார் 350-ல் இருந்து இன்று 2 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

  

34,000 பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டின் பங்களிப்பை ஒப்புக்கொண்டாலும், மாநிலத்தில் குறிப்பிடத்தக்க பயன்படுத்தப்படாத ஆற்றல் உள்ளது என்பதை அமைச்சர் குறிப்பிட்டார். புதுமை சார்ந்த தொழில்முனைவை விரைவுபடுத்த, குறிப்பாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், ஒரு உகந்த சூழல் அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற துடிப்பான வளர்ச்சி மையங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆர்வமுள்ள இளைஞர்கள், புத்தொழில்  நிறுவனங்களை விரிவுபடுத்த மத்திய அரசின் முயற்சிகள் மற்றும் கொள்கைகளைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

நாடு முழுவதும் 21 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை புத்தொழில் நிறுவனங்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்த  டாக்டர் ஜிதேந்திர சிங்வேலைவாய்ப்பு உருவாக்கத்தில்  புத்தொழில்  நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் மீது அளித்த சிறப்புக் கவனம் குறித்து குறிப்பிட்ட அமைச்சர், சோழ வம்சத்தின் அடையாளமான வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவியதை, மாநிலத்தின் வளமான பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் அடையாளமாகச் சுட்டிக்காட்டினார்.  40 லட்சம் உஜ்வாலா இணைப்புகள், 4 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு கடன்கள், மத்திய அரசு உதவியுடன் 12 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது மற்றும் மாநிலத்தில் எட்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவது உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நலத்திட்டமேம்பாட்டு முயற்சிகளையும் அவர் பட்டியலிட்டார்.

அறிவியல் ஆய்வகங்களின் முன்னுரிமைகளைச் சுட்டிக்காட்டிய  டாக்டர் ஜிதேந்திர சிங், தொழில்நுட்ப வழங்குநர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில்துறை மற்றும் மாணவர் சமூகத்தினரிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார். பொது நலனுக்காக புதுமைகளைத் தடையின்றி மாற்றுவதை உறுதி செய்வதற்காக. RISE மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார், இது புத்தொழில் நிறுவன சூழல் அமைப்புக்காக வளர்க்கப்படும் துடிப்பான மற்றும் ஆதரவான சூழலைப் பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, காஞ்சிபுரத்தில் லார்சன் & டூப்ரோவால் நிறுவப்பட்ட ஒரு சிறப்பு மையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அவரது முன்னிலையில், கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) மற்றும் கல்வி நிறுவனங்கள், அவற்றின் தொழில் பாதுகாப்பகங்கள்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்  பரிமாறப்பட்டன.

புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் செயலாளர் டாக்டர் என். கலைசெல்வி ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர், அரசின் நிதியுதவி பெறும் ஆய்வகங்களால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு கல்வி மற்றும் தொழில்துறையுடன் அரசு மேற்கொண்டுள்ள கூட்டு முயற்சிகளை அவர்கள் விளக்கினர்.

இந்தியாவை உலகளாவிய கண்டுபிடிப்புத் தலைவராக நிலைநிறுத்துவதற்கான அரசி உறுதிப்பாட்டிற்கு இணங்க, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறை இடையே கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் ஒரு துடிப்பான தேசிய தளத்தை உருவாக்க இந்த ஆர்ஐஎஸ்இ மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

***

SG/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2228169) வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க: English