சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டி - பிப்ரவரி 11 முதல் 15 வரை சென்னையில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 08 FEB 2026 9:04PM by PIB Chennai

இந்திய உணவு கழகத்தின் விளையாட்டு  மேம்பாட்டுப் பிரிவும், அகில இந்திய பொதுத்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து 2026 பிப்ரவரி 11 முதல் 15 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் அகில இந்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டியை நடத்துகிறது.

இந்த மதிப்புமிக்க தேசிய அளவிலான போட்டியில், நாடு முழுவதிலும் உள்ள முன்னணி பொதுத்துறை நிறுவனங்களின் சிறந்த ஹாக்கி வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி அலுவலகம், கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட், நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட், கோல் இந்தியா லிமிடெட், இந்திய உணவு கழகம் உள்ளிட்ட அவற்றின் ஹாக்கி அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

இந்தப் போட்டியானது, பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடையே உடல் தகுதியையும், விளையாட்டு மீதான ஆர்வத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அதே நேரத்தில் தேசிய அளவில் வீரர்களின் விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து வளர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வு நாடு முழுவதிலுமிருந்து வீரர்கள், அதிகாரிகள், ஹாக்கி ஆர்வலர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி சென்னையை தேசிய அளவில் ஹாக்கி விளையாட்டின் மையமாக நிலைநிறுத்தும்.

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2225212) आगंतुक पटल : 57
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English