அணுசக்தி அமைச்சகம்
ராஜா ராமண்ணா குழு திட்டத்தின் செயல்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 3:48PM by PIB Chennai
ராஜா ராமண்ணா குழு பதவிகளுக்கு அனுமதிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை 50 ஆகும். அதேபோல, தற்போது உள்ள பதவிகளின் எண்ணிக்கை 25 ஆகவும், பூர்த்தி செய்யப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை 9 ஆகவும் உள்ளது.
சுமார் 10 மாணவர்கள், தங்கள் ஆராய்ச்சிப் பணிகளுக்காக வழிநடத்தப்பட்டுள்ளனர். ராஜா ராமண்ணா குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் பரந்த அளவிலான கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புத்தகங்கள் எழுதுதல் மற்றும் வெளியிடுதல் மற்றும் துறையின் பொதுச் சேவை நடவடிக்கைகளுக்கு பங்களிப்பய் வழங்கிய அவர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது.
அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியப் பகுதிகளில் நிபுணத்துவத்தை கள வல்லுநர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கும், துறை சார்ந்த திட்டங்களை மேம்படுத்துவதற்கும் ராஜா ராமண்ணா குழு திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்தத் தகவலை பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலகத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223788®=3&lang=1
***
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224319)
வருகையாளர் எண்ணிக்கை : 7