PIB Headquarters
azadi ka amrit mahotsav

மத்திய பட்ஜெட் 2026–27: இந்தியாவின் ஜவுளி மதிப்பு சங்கிலியை வலுப்படுத்துதல்

இடுகை இடப்பட்ட நாள்: 04 FEB 2026 10:05AM by PIB Chennai

மத்திய பட்ஜெட் 2026–27, ஜவுளித் துறை உள்ளிட்ட முக்கியமான, முன்னணி  துறைகளில் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது.

இந்தியாவின் ஜவுளித் துறை, பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரியத்தில் வேரூன்றிய, நாட்டின் மிகப் பழமையான தொழில் துறைகளில் ஒன்றாகும். மத்திய பட்ஜெட் 2026–27, இந்தியாவின் வளர்ச்சியின் மையமாக ஜவுளித்  துறையை நிலைநிறுத்தி, பொருளாதாரத்தில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

தொழிலாளர் அடர்த்தி அதிகமான இந்தத் துறைக்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம், வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி வளர்ச்சி, கிராமப்புற வாழ்வாதாரங்கள் மற்றும் நிலைத்த உற்பத்தி ஆகியவற்றின் முக்கிய இயக்கியாக ஜவுளித் துறையை பட்ஜெட் அங்கீகரிக்கிறது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்திய ஜவுளித் துறைக்கு பல வலுவான சிறப்பம்சங்கள் உள்ளன. பரப்பளவு அடிப்படையில் உலகின் மிகப்பெரிய பருத்தி பயிரிடும் நாடு இந்தியா; சணல்  உற்பத்தியில் முதலிடம்; பட்டு மற்றும் பருத்தி உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடம்; மனிதனால் தயாரிக்கப்பட்ட இழை  பிரிவில் இரண்டாவது முக்கிய உலக மையம்; மேலும் பாலியஸ்டர் மற்றும் விச்கோஸ் இழை உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளர்.

மத்திய பட்ஜெட் 2026–27-ல், நூல் முதல் ஃபேஷன் வரை, கிராமத் தொழில்களிலிருந்து உலகச் சந்தைகள் வரை முழு துணி மதிப்பு சங்கிலியையும் வலுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த, விரிவான கொள்கை கட்டமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித்திறனை உயர்த்துதல், தன்னிறைவை ஊக்குவித்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் என்ற நோக்கில், தேசிய இழை திட்டம், துணி விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம், தேசிய கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் திட்டம், ஜவுளித் துறை முன்முயற்சி,  சமர்த் 2.0: மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டம் ஆகிய ஜவுளித் துறைக்கான ஒருங்கிணைந்த திட்டத்தை ஐந்து துணை கூறுகளுடன் அரசு முன்மொழிந்துள்ளது.

 துணி துறையிலுள்ள எம்எஸ்எம்இ-க்களுக்கான அணுகலை வலுப்படுத்த, ஏல அடிப்படையிலான தொகை தள்ளுபடி வர்த்தக அமைப்பு செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை ரூ. 7 லட்சம் கோடிக்கும் அதிகமான பயன் கிடைக்கும்.

எதிர்கால “சாம்பியன் எம்எஸ்எம்இ-க்களை உருவாக்குவதற்காக ரூ 10,000 கோடி மதிப்புள்ள தனிப்பட்ட சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் நிறுவனங்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

2025 ஜனவரி–நவம்பர் காலகட்டத்தில், இந்தியாவின் ஜவுளித் துறை 118 நாடுகள் மற்றும் ஏற்றுமதி இலக்குகளுக்கு ஏற்றுமதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

விவசாயத்திற்குப் பிறகு, இந்தியாவில் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாக ஜவுளித் துறை உள்ளது. பொருளாதார ஆய்வு 2026–27 படி, 8 முக்கிய தொழில் குழுக்களில் மொத்த வேலைவாய்ப்பில் இத்துறையின் பங்கு 9% ஆகும். 2025 மதிப்பீடுகளின்படி, பெண்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களை உட்பட, 4.5 கோடி (45 மில்லியன்) பேருக்கும் அதிகமானவர்களுக்கு இந்தத் துறை நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது.

பிரதமரின் மித்ரா ஜவுளிப் பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக 2027–28 வரை 7 ஆண்டுகளுக்கு ரூ 4,445 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.

 ஒவ்வொரு பூங்காவிலும் சுமார் ரூ10,000 கோடி முதலீட்டுடன், மொத்தமாக 3 லட்சம் வேலைவாய்ப்புகள் (1 லட்சம் நேரடி, 2 லட்சம் மறைமுக) உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2026–27-ன் வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு உருவாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த செயல்படுத்தல் ஆகியவற்றிற்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கிறது. மாநிலங்கள், தொழில் அமைப்புகள், எம்எஸ்எம்இ-க்கள், கைவினைஞர்கள் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஜவுளி அமைச்சகம் முன்னணியில் செயல்படுவதன் மூலம், இந்தியாவை போட்டித்திறன் மிக்க, நம்பகமான மற்றும் எதிர்காலத்தை நோக்கும் உலகளாவிய துணி மற்றும் ஆடை மையமாக வலுப்படுத்துகிறது.

வலுவான உற்பத்தி அடித்தளம், அதிகரிக்கும் ஏற்றுமதி மற்றும் தொடர்ச்சியான கொள்கை ஆதரவு ஆகியவற்றின் பின்னணியில், இந்தியாவின் ஜவுளித் துறை இன்று ஒரு முன்னேற்றத்தின் படியில் நிற்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222927&reg=3&lang=1

 

***

TV/PKV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2223054) வருகையாளர் எண்ணிக்கை : 21
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Bengali , Bengali-TR , Gujarati