சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ஒரு வார கால பயிற்சி நிறைவு

प्रविष्टि तिथि: 02 FEB 2026 8:54PM by PIB Chennai

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறை (ICE), இன்று (பிப்ரவரி 02, 2026), மத்திய கல்வி அமைச்சகத்தின் "கியான்" (GIAN) ஆதரவுடன் "மனித-இயந்திர இடைமுகங்கள் மற்றும் மறுவாழ்வு பொறியியலில் அதன் பயன்பாடுகளின் அறிமுகம்" என்ற தலைப்பில் ஒரு வார கால பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கை என்ஐடி இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா தொடங்கி வைத்தார். குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளை வழங்குவதில், சுகாதார தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித-இயந்திர இடைமுகங்கள் ஆராய்ச்சியின் பங்கை அவர் எடுத்துரைத்தார். தொடக்க உரை ஆற்றிய ஐசிஇ துறையின் பேராசிரியர் டாக்டர் என். சிவகுமாரன், ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான இடைவெளிகளை நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் நிரப்புவதன் அவசியத்தைக் குறிப்பிட்டார்.

 

ஐந்து நாள் பயிலரங்கின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அமர்வுகளை நடத்திய அமெரிக்காவின் பால்டிமோர் கவுண்டியில் (UMBC) உள்ள மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் மின்னணு பொறியியல் இணைப் பேராசிரியரான டாக்டர். ரமணா வின்ஜாமுரி, மனித-இயந்திர இடைமுக அமைப்புகள் மற்றும் மறுவாழ்வு சார்ந்த நரம்பியல் தொழில்நுட்பங்களில் மேம்பட்ட நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார். “மனித-இயந்திர இடைமுக ஆராய்ச்சி, ஆய்வகத்திலிருந்து நிகழ் உலக மறுவாழ்வுக்கு முன்னேற வேண்டும்”, என்று அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல இருதயநோய் நிபுணர் டாக்டர். செந்தில்குமார் நல்லுசாமி, இதயவியல் மற்றும் நவீன இருதய பராமரிப்பில் மனித-இயந்திர தொடர்புகளின் முக்கிய பங்கு குறித்துப் பேசினார்.

***

TV/BR/RK


(रिलीज़ आईडी: 2222365) आगंतुक पटल : 1060
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English