சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுலா,கலாச்சாரத் துறைகளுக்கு மத்திய பட்ஜெட் மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கிறது: மத்திய அமைச்சர் திருகஜேந்திர சிங் ஷெகாவத்

प्रविष्टि तिथि: 01 FEB 2026 6:42PM by PIB Chennai

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், 2026-27 மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ளார். இது இந்த துறைகளுக்கு முன் எப்போதும் இல்லாத ஊக்கத்தை அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில்  இந்த பட்ஜெட் சுற்றுலா வளர்ச்சியை விரைவுபடுத்தி, இந்தியாவை ஒரு உலகளாவிய சுற்றுலா மையமாகவும் கலாச்சாரத் தலைமை இடமாகவும் நிலைநிறுத்தும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள  அவர், பாரம்பரியம், ஆன்மீகம், சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றுக்கு ஊக்கத்தை அளிக்கும் பட்ஜெட்டை வழங்கியதற்காக நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், சூழல் சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான முன்முயற்சிகள் இந்தப் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221781&reg=3&lang=1

***

(Release ID: 2221781)

VJ/PKV/PLM/SH


(रिलीज़ आईडी: 2221895) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी