PIB Headquarters
பாரத் பர்வ் 2026 - இந்திய பாரம்பரியத்தை துடிப்புடன் எடுத்துக்காட்டிய நிகழ்வு
प्रविष्टि तिथि:
31 JAN 2026 4:10PM by PIB Chennai
நாட்டின் 77-வது குடியரசு தினம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டு அதன் அணிவகுப்பு தில்லியில் நடைபெற்ற நிலையில், தில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை நாட்டின் துடிப்பான ஆன்மாவை எடுத்துக்காட்டும் இடமாக மாறியுள்ளது.
சுற்றுலா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு நாள் தேசிய கலாச்சார, சுற்றுலா விழாவான பாரத் பர்வ், ஜனவரி 26 அன்று தொடங்கி ஜனவரி 31 வரை நடைபெற்றது. 2016-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரியத்தில் மூழ்க பார்வையாளர்களை அழைக்கிறது.
குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புதுதில்லி செங்கோட்டைக்கு முன்பு உள்ள பகுதியில் பாதையில் பாரத் பர்வ் நடைபெறுகிறது. இந்த நிகழ்வு இந்தியாவின் வளமான கலாச்சார, கலை, சமையல், ஆன்மீக பாரம்பரியத்தை கொண்டாடுகிறது, அதே நேரத்தில் தேசிய முயற்சிகளான ஒரே பாரதம் உன்னத பாரதம் மற்றும் "நமது தேசத்தை சுற்றிப் பார்ப்போம்" ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இந்த விழா இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தன்மையையும் சுற்றுலா திறனையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தளமாக உருவாகியுள்ளது.
இந்த ஆண்டு பாரத் பர்வ் சிறப்பு நிகழ்வுகளைக் கொண்டிருந்தது. இது "வந்தே மாதரம்" பாடலின் 150 வது ஆண்டு நிறைவையும் கொண்டாடியது. விழா மைதானம் முழுவதும், இந்தியாவின் பன்முகத்தன்மை வெளிப்பட்டது.
ஜனவரி 26 ஆம் தேதி கடமைப் பாதையில் நடைபெற்ற அணிவகுப்பில் இடம்பெற்ற 41 அலங்கார ஊர்திகளும் பாரத் பர்வில் காட்சிப்படுத்தப்பட்டன .
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்களின் இந்த அலங்கார ஊர்திகள், கலாச்சார பாரம்பரியம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சமூக முன்னேற்றம் என பல கருப்பொருள்களை சித்தரித்தன. அவற்றை அருகில் நெருக்கமாகப் பார்க்கும்போது, அவற்றின் கலைத்திறன் தெளிவாக தெரிந்த்து.
48 கலாச்சார நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன. மாநில குழுக்கள், கலாச்சார அகாடமிகள், புகழ்பெற்ற கலைஞர்களின் நடனங்கள், இசைக் குழுக்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயுதப்படைகள், துணை ராணுவ இசைக்குழுக்களின் 22 நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்தியா முழுவதும் எந்தப் பயணமும் உணவு இல்லாமல் முழுமையடையாது. பாரத் பர்வின் பிரமாண்டமான உணவு அரங்கம் நாட்டின் பலவகையான சமையல் வகைகளை ஒரே இடத்தில் கொடுப்பதாக அமைந்தது.
டிஜிட்டல் கண்காட்சிகள், பாரம்பரியத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்ததுடன், பாரம்பரியத்தை நீர்த்துப்போகச் செய்யாமல் இளைய பார்வையாளர்களுக்கு வழங்கியது.
இன்று (ஜனவரி 31, 2026) நடைபெற்ற நிறைவு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பாரத் பர்வ் 2026 முடிவடைந்த நிலையில், அது பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவத்தை விட்டுச் சென்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள இணைப்புகளைப் பார்க்கவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221235®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218525®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218957®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219507®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219961®=3&lang=1
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/nov/doc2025116686201.pdf
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2221325)
आगंतुक पटल : 6