புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேம்பட்ட கண்காணிப்பு வலையமைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 29 JAN 2026 5:10PM by PIB Chennai

கனமழை, மின்னல், இடியுடன் கூடிய மழை போன்ற கடுமையான வானிலை நிகழ்வுகளுக்கு சாஷே (SACHET) தளத்தைப் பயன்படுத்தி இந்திய வானிலை ஆய்வு மையம் பொதுவான எச்சரிக்கை நெறிமுறைகளை உருவாக்குகிறது. இந்த எச்சரிக்கைகள் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் புவிசார் இலக்கு பயனர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பரப்பப்படுகின்றன. இந்த எச்சரிக்கைகள் சாஷே வலைத்தளம் மற்றும் செல்பேசி செயலி மூலமாகவும் விடுக்கப்படுகின்றன.

இந்த அமைப்புமுறைகள் பேரிடர் தயார்நிலை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்தியுள்ளன. பரவல்களில் ஏற்பட்ட இத்தகைய முன்னேற்றங்கள் காரணமாக, ஆகஸ்ட் 2021 முதல் மொத்தம் 9342 கோடி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சமீபத்திய "மோந்தா" புயலின் போது மொத்தம் 77.64 கோடி குறுஞ்செய்திகள்  அனுப்பப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றங்கள், கடுமையான வானிலை நிகழ்வுகளின் துல்லியமான முன்னறிவிப்பில் முன்னேற்றத்திற்கும், இறப்பு எண்ணிக்கையின் கணிசமான குறைப்புக்கும் வழிவகுத்தன.

இந்தத் தகவலை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணையமைச்சர்  (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2220209)

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2220727) வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी