நிலக்கரி அமைச்சகம்
சுரங்கம், கனிமவள மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கோக்கிங் நிலக்கரி அரிய வகை கனிம வளமாக மத்திய அரசு அறிவிப்பு
प्रविष्टि तिथि:
29 JAN 2026 12:30PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையுடன் சுரங்கத்துறையில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுரங்கம், கனிமவள மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் கோக்கிங் நிலக்கரியை அரிய வகை கனிமவளமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை அமல்படுத்தும் உயர்நிலைக் குழு மற்றும் நித்தி ஆயோக்கின் கொள்கைகளை வகுக்கும் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. உள்நாட்டில் எஃகு உற்பத்தித்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் கனிமவள பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் கோக்கிங் நிலக்கரியின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்தியாவின் கோக்கிங் நிலக்கரி வளம் 37.37 பில்லியன் டன்களாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் பெரும்பகுதி ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ளது. கடந்த 2020-21-ம் ஆண்டில் 51.20 மில்லியன் டன்களாக இருந்த கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 2024-25-ம் ஆண்டில் 57.58 மில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219947®=3&lang=1
----
TV/SV/KPG/EA
(रिलीज़ आईडी: 2220165)
आगंतुक पटल : 15