தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தில்லியில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வரும் சேவையின் தரம் குறித்த மதிப்பீடு
प्रविष्टि तिथि:
22 JAN 2026 2:10PM by PIB Chennai
தில்லியில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ள பகுதிகளில் வழங்கி வரும் தொலைபேசி சேவைகளின் தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சோதனை மேற்கொண்டது. 2025 டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவுகளை ட்ராய் வெளியிட்டுள்ளது.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தில்லி மண்டல அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தில்லியில் உள்ள நகர்ப்புற பகுதிகள், முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், பொதுப் போக்குவரத்து மையங்கள், அதிவேக வழித்தடங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுச் சூழல்களில் மொபைல் சேவையின் செயல்திறனைக் கண்டறியும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. டிசம்பர் 15 முதல் 18-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் 12 முக்கிய இடங்களில் 347.4 கிமீ தொலைவிற்கு சேவையின் தரம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இந்தச் சோதனையின் முடிவுகள் சம்பந்தப்பட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217221®=3&lang=1
***
AD/SV/KPG/SE
(रिलीज़ आईडी: 2217400)
आगंतुक पटल : 8