தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் திருச்சி நகர்ப்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொலைத்தொடர்புத்துறையின் சேவை குறித்து ட்ராய் மதிப்பீடு

प्रविष्टि तिथि: 22 JAN 2026 12:35PM by PIB Chennai

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) 2025 டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்த கள ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில், திருச்சி நகர்ப்புற பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பல்வேறு பயன்பாட்டுச் சூழல்களில் மொபைல் சேவையின் செயல்திறன் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீடுகள் ஐதராபாதில் உள்ள இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மண்டல அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. டிசம்பர் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து 371.3 கிமீ தொலைவிற்கு கள ஆய்வுகள் நடத்தப்பட்டன.

மேலும், 7 முக்கிய இடங்களில் தொலைத்தொடர்பு சேவையின் தரம் குறித்த விரிவான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்ட தொழில்நுட்பங்களில் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி ஆகியவை அடங்கும். இந்தச் சோதனையில் குரல் அழைப்புகள், அழைப்புகளுக்கு இடையேயான சேவை இடையூறு, குரலின் தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்தப் பரிசோதனை நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217196&reg=3&lang=1

***

AD/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2217277) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी