உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2025-ஆம் ஆண்டு மீளாய்வு
प्रविष्टि तिथि:
21 JAN 2026 5:08PM by PIB Chennai
இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை 2025-ஆம் ஆண்டில் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வளர்ச்சியை எட்டியுள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடி நவி மும்பை, பாட்னா, ததியா, சத்னா, அமராவதி, பூர்ணியா மற்றும் குவஹாத்தி ஆகிய இடங்களில் புதிய விமான நிலையங்கள் மற்றும் முனையங்களைத் திறந்து வைத்தார்.
குறிப்பாக, நவி மும்பை சர்வதேச விமான நிலையம் ஆசியாவின் முக்கிய இணைப்பு மையமாக உருவெடுத்துள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை ஜூலை 26 அன்று பிரதமர் திறந்து வைத்தார். இதன் மூலம் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் பயணிக்கும் வசதி ஏற்பட்டுள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ராம்மோகன் நாயுடு தலைமையில், பயணிகளின் புகார்களை விரைந்து தீர்க்க 'பயணிகள் உதவி கட்டுப்பாட்டு அறை' அமைக்கப்பட்டது. ஒரே நாளில் 5.38 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் பயணித்து புதிய சாதனை படைக்கப்பட்டது. மேலும், மூன்று புதிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், விமானப் படை வீரர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மையங்கள் அதிகரிக்கப்பட்டன. குவஹாத்தி விமான நிலையம் நாட்டின் முதல் 'இயற்கை கருப்பொருள்' கொண்ட விமான நிலையமாக மாற்றப்பட்டது. சர்வதேச அளவில் ஐ.சி.ஏ.ஓ அமைப்பில் இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது இத்துறையின் உலகளாவிய அங்கீகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216972®=3&lang=1
---
TV/VK/RK
(रिलीज़ आईडी: 2217088)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English