PIB Headquarters
இந்தியா - செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு 2026
प्रविष्टि तिथि:
20 JAN 2026 7:07PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வரும் பிப்ரவரி 16 முதல் 20-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு 'செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு' நடைபெற உள்ளது. இந்தியாவில் நடத்தப்படும் முதல் சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு இது என்பதால் உலக நாடுகளின் கவனம் இதன் மீது திரும்பியுள்ளது. மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில், கொள்கை உருவாக்கம், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்த உள்ளதோடு, சுமார் ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய உந்துசக்தியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாகச் சுகாதாரம், விவசாயம், கல்வி மற்றும் நிதித் துறைகளில் இது புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் தொலை மருத்துவம் மூலம் நோய்களைக் கண்டறிதல், விவசாயிகளுக்குப் பிராந்திய மொழிகளில் வானிலை மற்றும் சந்தை நிலவரங்களைத் தெரிவிக்கும் 'கிசான் இ-மித்ரா' போன்ற திட்டங்கள் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன. மேலும், நீதிமன்றத் தீர்ப்புகளைப் பழங்குடி மற்றும் உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்ப்பது போன்ற நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் இது பேருதவியாக உள்ளது. 2047-க்குள் 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை எட்டுவதில் இந்த உச்சிமாநாடு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216548®=3&lang=1
வெளியீட்டு எண்: 2216548
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2216640)
आगंतुक पटल : 119