சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மதுரை மண்டலத்திற்குட்பட்ட 6 மாவட்டங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் ஜனவரி 27 அன்று நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 20 JAN 2026 8:48PM by PIB Chennai

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் நிதி உங்கள் அருகில் மற்றும் இஎஸ்ஐசி-சுவிதா சமகம் இணைந்து நடத்தும் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதன்படி இம்மாதம் 27-ம் தேதி காலை 9.00 மணி முதல் நடைபெறுகிறது.

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, விருதுநகர், பழனி ஆகிய ஊர்களில் இஎஸ்ஐசி கிளை அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள்சந்தாதாரர்கள்ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள்வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான விவகாரங்கள் மற்றும் இஎஸ்ஐசி பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள்சந்தாதாரர்கள பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் குறைகளுக்கு தீர்வு காண t.ly/nPTt என்ற இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்த பின்னர் இக்கூட்டத்தில் பங்கேற்கலாம்.

***

 AD/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2216613) வருகையாளர் எண்ணிக்கை : 67
இந்த வெளியீட்டை படிக்க: English