சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஜிப்மர் 14-வது பட்டமளிப்பு விழா 20 ஜனவரி 2026 அன்று நடைபெற உள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 JAN 2026 1:20PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), புதுச்சேரி, தனது 14-வது பட்டமளிப்பு விழாவை 20 ஜனவரி 2026 அன்று தனது வளாகத்தில் நடத்த உள்ளது.

இந்த விழாவின் முதன்மை விருந்தினராக மாண்புமிகு இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை மற்றும் இரசாயனங்கள் மற்றும் உரத் துறை இணை அமைச்சர், திருமதி அனுப்ரியா படேல் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்ற உள்ளார்.

இந்த சிறப்பு விழாவில் மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன், முதலமைச்சர் திரு என். ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 941 மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர். இதில் 39 பேர் Ph.D., 49 பேர் DM, 26 பேர் M.Ch., 11 பேர் PDCC, 9 பேர் PDF, 269 பேர் MD, 129 பேர் MS, 1 பேர் MDS மற்றும் 408 பேர் மருத்துவம் படிப்புகளை நிறைவு செய்துள்ளனர்.

மேலும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 180 பதக்கங்கள் மற்றும் நிதி விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் 83 இளநிலை, 90 முதுநிலை மற்றும் 7 சூப்பர் ஸ்பெஷாலிட்டி (Super Specialty) மாணவர்கள் தங்களது பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காக விருது பெறுகின்றனர்.

விழாவில் ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி நிறுவனம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

***

TV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2215786) வருகையாளர் எண்ணிக்கை : 114
இந்த வெளியீட்டை படிக்க: English