சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்தியாவில் நதி மற்றும் கழிமுக டால்பின்களின் இரண்டாவது மதிப்பீடு பிஜ்னோரில் தொடங்கியது
प्रविष्टि तिथि:
17 JAN 2026 2:46PM by PIB Chennai
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கிர்-ரில், வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தில் பிரதமரால் முதலாவது சுற்று டால்பின்கள் எண்ணிக்கை மதிப்பீடு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாட்டில் டால்பின்களின் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்ல, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், டால்பின் திட்டத் திட்டத்தின் கீழ் நதி மற்றும் கழிமுக டால்பின்களின் இரண்டாவது சுற்று மதிப்பீட்டை உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோரில் தொடங்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் வனவிலங்கு வார நிகழ்ச்சியின்போது டேராடூனில் 2-வது சுற்று டால்பின்களின் எண்ணிக்கை மதிப்பீட்டைத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம், மாநில வனத்துறைகள், இந்திய வனவிலங்கு அறக்கட்டளை ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன.
இந்தச் சுற்றில் உத்தரபிரதேசத்தின் 13 மாவட்டங்களைச் சேர்ந்த வன ஊழியர்களுக்கான பிராந்திய பயிற்சி பிஜ்னோரில் நடைபெற்றது. கணக்கெடுப்புகள் நடைபெறும்போது அதன் திறனை உறுதி செய்வதற்காக தொடர் பயிற்சி நடத்தப்படும்.
மூன்று படகுகளில் 26 ஆராய்ச்சியாளர்களுடன் இந்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. சுற்றுச்சூழல், வாழ்விட அளவீடுகளைப் பதிவுசெய்யப்படுகிறது. நீருக்கடியில் ஒலி கண்காணிப்புக்கு ஹைட்ரோஃபோன்கள் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது சுற்றின் முதல் கட்டத்தில், பிஜ்னோர் முதல் கங்கா சாகரின் சிந்து நதி வரையில் கங்கை நதியின் முக்கிய பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெறும். இரண்டாவது கட்டத்தில், பிரம்மபுத்திரா, கங்கையின் துணை நதிகள், சுந்தரவனக்காடுகள், ஒடிசா பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெறும்.
கங்கை நதி டால்பினைத் தவிர, சிந்து நதி டால்பின், ஐராவதி டால்பின்களின் நிலை, வாழ்விட நிலை, அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு முன்னுரிமை ஆகியவற்றை இந்த கணக்கெடுப்பு மதிப்பிடும். இந்த முயற்சி இந்தியாவின் நதிகளின் சூழல் அமைப்பில், சான்று அடிப்படையிலான பாதுகாப்பு திட்டமிடலையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ந வலுவாக உதவும். இதற்கு முந்தைய நாடு தழுவிய கணக்கெடுப்பு 2021–23-ம் ஆண்டு காலகட்டத்தில் நடைபெற்றது. அதில் இந்தியாவில் சுமார் 6,327 நதி டால்பின்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது.
***
(Release ID: 2215575)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2215675)
आगंतुक पटल : 10