தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
நாசிக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நெட்வொர்க் தரத்தை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்தது
प्रविष्टि तिथि:
13 JAN 2026 12:07PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), நவம்பர் 2025-ல் விரிவான நகரம்/ரயில்வே/கடலோர வழித்தடங்களை உள்ளடக்கிய நாசிக் மற்றும் நாசிக் உரிமம் பெற்ற சேவைப் பகுதிக்கான இயக்கச் சோதனை முடிவுகளை வெளியிட்டது. பெங்களூருவில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இயக்கச் சோதனைகள், நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன செயல்பாட்டிடங்கள், பொதுப் போக்குவரத்து மையங்கள், அதிவேக தடங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டு சூழல்களில் நிகழ் நேர மொபைல் நெட்வொர்க் செயல்திறனைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டன.
2025, நவம்பர் 18 முதல் 21 வரை, ட்ராய் குழுக்கள் நாசிக்கில் 250.1 கி.மீ நகரப் பயணம், 9 செயல்பாட்டிடங்கள், 9.4 கி.மீ நடைப்பயிற்சி சோதனை, 227.7 கி.மீ நெடுஞ்சாலைப் பயணம் உட்பட 487.2 கி.மீ. தூரத்திற்கு விரிவான சோதனைகளை மேற்கொண்டன. மதிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்களில் 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி ஆகியவை அடங்கும். இது பல செல்பேசி திறன்களில் பயனர்களின் சேவை அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. சுயேச்சையான இயக்கச் சோதனையின் கண்டுபிடிப்புகள் மேலும் தேவையான நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குவோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனைகள் ட்ராய் உபகரணங்கள் மற்றும் நிகழ்நேர சூழல்களில் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன. விரிவான அறிக்கை www.trai.gov.in என்ற ட்ராய் வலைத்தளத்தில் கிடைக்கிறது. ஏதேனும் தெளிவுபடுத்தல்/தகவலுக்கு ட்ராய் ஆலோசகர் (பிராந்திய அலுவலகம், பெங்களூரு) திரு பிரஜேந்திர குமாரை, adv.bengaluru@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் அல்லது +91-80-22865004 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214062®=3&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2214327)
आगंतुक पटल : 4