சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) திருவள்ளூரில் ஊடகப் பயிலரங்கை நடத்தியது

प्रविष्टि तिथि: 13 JAN 2026 3:02PM by PIB Chennai

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) தனது மக்கள் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை ஈடுபடுத்தும் நோக்கில் திருவள்ளூரில் இன்று ஊடகப் பயிலரங்கை நடத்தியது.

வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் (விபி ஜி ராம் ஜி) குறித்தும் கிராமப்புற வளர்ச்சியை வலுப்படுத்துவதில் அதன் பங்கு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. முதல் அமர்வில் உரையாற்றிய எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை விஞ்ஞானி திரு பாலசுப்ரமணியன், மேம்பட்ட உள்கட்டமைப்பு, வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகல் மூலம் கிராமங்களின் முழுமையான வளர்ச்சியை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

திறன் மேம்பாடு, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், உள்ளூர் தொழில்முனைவு, மேம்பட்ட போக்குவரத்து, சுகாதாரம், கல்வி மற்றும் டிஜிட்டல் அணுகல் மூலம் வாழ்வாதார மேம்பாட்டை விபி ஜி ராம் ஜி ஊக்குவிக்கிறது என்பதை எடுத்துரைத்தார். கிராம அளவில் நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் கிராமப்புறத்திலிருந்து மக்கள் நகர்ப்புறத்திற்கு  இடம்பெயர்வதைக் குறைக்கவும் இந்தத்  திட்டம் முயற்சி செய்கிறது என்றார்.

விபி ஜி ராம் ஜி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை அவர் விவரித்தார். பழைய திட்டம் முதன்மையாக உடல் உழைப்பு மூலம் கூலி வேலைவாய்ப்பை வழங்குவதில் கவனம் செலுத்தியது. ஆனால், விபி ஜி ராம் ஜி என்பது உள்கட்டமைப்பு உருவாக்கம், பலவகையான வாழ்வாதாரம், திறன் மேம்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் விரிவான மற்றும் நீண்டகால மேம்பாட்டு அணுகுமுறையைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இரண்டாவது அமர்வில் நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் திருமதி டி.பி. கிருத்திகா உரையாற்றினார். கிராமப்புற வளர்ச்சியில் நபார்டு வங்கியின் பங்களிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு அவர் விளக்கினார். கிராமப்புற உள்கட்டமைப்பு, பண்ணை மற்றும் எம்எஸ்எம்இ கடன், கைத்தறித் துறை மேம்பாடு, வாழ்வாதார அடிப்படையிலான தொகுப்பு மேம்பாட்டை நபார்டு வங்கி ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நபார்டு வங்கி, கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆதரவளிப்பதாகவும், சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும், வங்கிகளுடன் கடன் இணைப்பை எளிதாக்குவதாகவும், கூட்டுறவு மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளை மேற்பார்வையிடுவதாகவும் அவர் தெரிவித்தார். நபார்டு ஆதரவு பெற்ற சென்னிமலை, குடியாத்தம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாழைப்பழம் மற்றும் ஆரணி பட்டுத் தொகுப்புகளும் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்த பங்களிப்பு செய்துள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு பி. அருண் குமார், துணை இயக்குநர் திருமதி விஜயலட்சுமி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

 AD/PD


(रिलीज़ आईडी: 2214164) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English